ஜனாதிபதி மைத்திரிக்கு இன்று பிறந்த நாள்!!

281

Maithripala-Sirisena_15ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசே­னவின் 64ஆவது பிறந்த தினம் இன்­றாகும். இதனை முன்­னிட்டு நாட­ளா­விய ரீதியில் மூவின மதங்­களின் சமய அனுஷ்­டா­னங்­க­ளும் இடம் பெற­வுள்­ளன.

ஜனா­தி­ப­தியின் பிறந்த தினத்தை முன்­னிட்டு அவ­ருக்கு ஆசி­வேண்டி பொலன்­ன­று­வையில் பல்­வேறு சமய நிகழ்­வுகள் இடம்­பெற்­ற­தோடு பழு­கஸ்­க­ம­னவில் உள்ள கத்­தோ­லிக்க தேவா­ல­யத்தில் ஆரா­த­னையும் மன்­னம்­பிட்­டி­ய­வி­லுள்ள இந்து கோவிலில் பூஜை நிகழ்­வுகள் இடம் பெற்­றன.

கது­ரு­வெல ஜூம்மா பள்­ளி­வா­ச­ளிலும் பிராத்­தனை நிகழ்­வு­களும் இடம் பெற்­ற­தோடு இன்­றைய தினமும் காலை முதல் முவீன மதஸ்­தா­னங்­க­ளிலும் பல்­வேறு சமய நிகழ்­வுகள் இடம் பெற­வுள்­ளன.இந்­நி­கழ்வில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் உட்­பட மக்கள் பிர­தி­நி­தி­களும் கலந்து கொள்­ள­வுள்­ளனர்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன 1951 ஆம் ஆண்டு செம்­டம்பர் மாதம் 03 ஆம் திகதி கம்­பஹா மாவட்­டத்தில் யாகோட பிர­தே­சத்தில் பிறந்தார். 1989 ஆம் ஆண்டு சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தி­து­வத்தை பெற்றதோடு இலங்கை அமைச்சரவையில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.