மனிதாபிமானத்தை கேள்விகுறியாக்கியுள்ள கண்கலங்க வைக்கும் புகைப்படம்: சிரியா யுத்தத்தின் பிரதிபலிப்பு!!

284


syrian-child-turkey (1)ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாத ஒன்றை புகைப்படம் ஒன்று சொல்லி விடும். வியட்னாம் போர், ஆபிரிக்காவின் வறுமை என்பன இதற்கு சான்று. இந்நிலையில் பார்ப்பவர்களின் மனதை நிலைகுலைய வைக்கும் வகையில் புகைப்படம் ஒன்று வெளியாகி உலக மக்களை துயருற வைத்துள்ளது.

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக ஐரோப்பாவிற்கு அகதியாக செல்ல முயன்ற போது, படகு விபத்துகுள்ளாகி மத்தியதரைகடலில் முழ்கி இறந்து போன குழந்தை ஒன்றின் புகைப்படமே இது.



இந்தப் புகைப்படத்தை பார்க்கும் போது ஒரு கனம் மனம் மௌனிக்கின்றது.

சிரியாவில் இடம்பெறும் உள்நாட்டு போர் காரணமாக தமது உயிரை பாதுகாத்து கொள்வதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு படகுகள் மூலம் அந் நாட்டு மக்கள் அகதிகளாக செல்கின்றனர்.



எனினும் உயிரை பாதுகாப்பதற்காக உயிரை பணயம் வைத்து வரும் அகதிகளை தங்கள் நாட்டுக்குள் நுழைவதை கடுமையாக ஐரோப்பிய நாடுகளின் எதிர்த்து வருகின்றன.
இந்நிலையில் குறித்த குழந்தையின் புகைப்படம் வெளியாகி மனிதாபிமானத்தை கேள்வி குறியாக்கியுள்ளது.