இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தயார்!!

238


16971594966935007252இலங்கையின் பங்காளியாக முன்னின்று இலங்கை முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்கு தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதன்படி இலங்கையில் நல்ல ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்குவது தமது நோக்கம் என்றும் தெரிவித்துள்ளது.



நடைபெற்று முடிந்த தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக இலங்கை வருகை தந்திருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்கள் சில சிவில் அமைப்புக்களுக்கு பெறுமதிமிக்க பொருட்களை கையக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

108,000 யூரோ பெறுமதியான மடிக்கனிணிகள் மற்றும் தொலைபேசிகள் உட்பட பல அலுவலக உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.



தேர்தல் காலத்தின் போது ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு பல்வேறு வழிகளில் உதவிகளை செய்துள்ளதாக ஐரோப்பிய தேர்தல் சங்க உறுப்பினர்கள் இதன்போது தெரிவித்திருந்தனர்.



அதன் ஒரு கட்டமாக வாக்காளர்களை பதிவு செய்வதற்கு 1.2 மில்லியன் யூரோ நிதி வழங்கியதாகவும் அத்துடன் அடுத்த கட்ட நடவடிக்கையாக சிவில் அமைப்புக்களுக்கு அலுவலக உபகரணங்கள் வழங்கியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.