யேம­னிய பள்­ளி­வா­சலில் இரட்டைத் தற்­கொலை குண்டுத் தாக்குதல்; 32 பேர் பலி ; 92 பேர் காயம்!!

284

yeman_1யேம­னிய தலை­நகர் சனா­வி­லுள்ள பள்­ளி­வா­ச­லொன்றில் புதன்­கி­ழமை இடம்­பெற்ற இரட்டைத் தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தலில் குறைந்­தது 32 பேர் பலி­யா­ன­துடன் 92 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர்.

பள்­ளி­வா­சலில் தொழு­கையை நிறை­வேற்றி விட்டு மக்கள் வெளி­யேறிக் கொண்­டி­ருந்த வேளை அவர்கள் மத்­தியில் பிர­வே­சித்து தற்­கொலைக் குண்­டு­தா­ரி­யொ­ருவர் குண்டை வெடிக்க வைத்­துள்ளார்.

இந்தக் குண்டு வெடிப்பில் காய­ம­டைந்­த­வர்­க­ளுக்கு உதவும் முக­மாக அங்கு மக்கள் கூடிய வேளை, காரொன்றைச் செலுத்தி வந்த தற்­கொலைக் குண்­டு­தா­ரி­யொ­ருவர் குண்டை வெடிக்க வைத்­த­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

தாமே இந்தத் தாக்­கு­தல்­களை நடத்­தி­ய­தாக ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் உரிமை கோரி­யுள்­ளனர்.அன்­றைய தினம் வட யேமனில் சர்­வ­தேச செஞ்­சி­லுவைச் சங்­கத்தைச் சேர்ந்த இரு உள்ளூர் பணி­யா­ளர்கள் சுட்டுக் கொல்­லப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

வாக­ன­மொன்றில் வந்த துப்­பாக்­கி­தா­ரி­யொ­ருவர் அந்த இரு பணி­யா­ளர்­க­ளையும் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்­றுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.தாக்­குதல் நடத்­தப்­பட்ட பள்­ளி­வாசல் ஹோதி கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்கு ஆத­ர­வாக செயற்­பட்டு வந்­துள்­ளது.

கடந்த மார்ச் மாத இறு­தியில் ஹோதி கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக சவூதி தலை­மை­யி­லான கூட்­ட­மைப்பு நாடு­களின் படை­யினர் வான் தாக்­கு­தல்­களை ஆரம்­பித்­தது முதற்கொண்டு அந்­நாட்டில் வன்­மு­றைகள் அதி­க­ரித்­துள்­ளன.