அரசியலில் குதிக்கும் நமீதா!!

628


Namitha-Hot-Photoshoot-Photo-Gallery-2சில வருட இடைவெளிக்கு பின் மீண்டும் நடிப்பதில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார் நமீதா. தன்னுடைய கவர்ச்சியான கட்டுடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்காததால் நமீதா, நமீமீமீதாவாகிப் போனார். இதனால் இயக்குநர்கள் முதலில் உடல் எடையைக் குறையுங்கள்.

பிறகு பார்ப்போம் என்றனர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானா நமீதா அதன் பின் ஒருவழியாக தன்னுடைய உடல் எடையை மூன்றே மாதத்தில் இருபது கிலோ வரை குறைத்து, தற்போது ஜம்மென்று சிக்கென இருக்கிறார்.



இப்போது அவரைத் தேடி வாய்ப்பு வந்திருக்கிறது. இது தொடர்பாக அவரிடம்கேட்டபோது,

ஆமாம் நான் தற்போது புதிய இயக்குநர் ஒருவரின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறேன். இதற்காக என்னுடைய உடல் எடையை பதினேழு கிலோ வரை குறைத்திருக்கிறேன். படபிடிப்புக்கு போகும் முன் மேலும் மூன்று கிலோவை குறைத்துவிடுவேன். தொடர்ந்து படங்களில் நடிக்கத்தான் விரும்புகிறேன்.



அதிலும் எக்சன் ஹீரோயினாக நடிக்க ஆசைப்படுகிறேன். அதற்காக சொந்தமாக படம் தயாரிக்கும் எண்ணம் இல்லை. அதே சமயத்தில் அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு சேவை செய்யவும் எண்ணியிருக்கிறேன். இது எப்போது நடக்கும் என்று என்னால் உறுதியாக கூற முடியாது. ஆனால் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இருக்கிறது என்றார்.