விஷம் நிறைந்த மீனுக்கும் பாம்புக்கும் சண்டை!!

295

327577852Untitled-1உலகின் மிக விஷம் நிறைந்த மீனுக்கும் பாம்புக்கும் இடையில் நடந்த சண்டை ஒன்றை, அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மீனவர் ஒருவர் படம்பிடித்துள்ளார்.

அந்த நாட்டின் டார்வினுக்கு அருகில் உள்ள கடல் பகுதியில் ஒரு பாம்புக்கும் மீனுக்கும் இடையில் நடந்துகொண்டிருந்த சண்டயை ரிக் ட்ரிப் என்ற அந்த மீனவர் பார்த்தார்.

இந்தப் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டதும், அவை உலகம் முழுவதும் வேகமாகப் பரவின.

இரண்டாம் உலகப்போர் காலத்து சிதைவுகளைத் தேடி டார்வின் துறைமுகத்தில் நீந்திக் கொண்டிருந்தபோது இந்தச் சண்டையைப் பார்த்தாக ரிக் தெரிவித்துள்ளார்.

பாம்பையும் அதைத் தன் வாயில் கவ்வியிருந்த மீனையும் சேர்த்து தண்ணீருக்கு வெளியில் எடுத்தார் ரிக். பிறகு, இரண்டையுமே தண்ணீரில் விட்டுவிட்டார். மீனிடமிருந்து தப்பிய பாம்பு மீண்டும் மீனை நோக்கி வந்தது.

ஆனால், விஷம் நிறைந்த மீனிடம் கடிபட்ட அந்தப் பாம்பு இறந்துவிட்டதாக ரிக் தெரிவிக்கிறார்.

ஸ்டோன் ஃபிஷ் எனப்படும் அந்த மீன் கடித்த மனிதர்களுக்கு சிகிச்சையளிக்காவிட்டால், அவர்கள் இரண்டு மணி நேரத்தில் இறந்துவிடுவார்கள்.

இதற்கு முன்பாக வேறு விசித்திரங்களையும் ரிக் டார்வின் துறைமுகத்தில் பார்த்திருக்கிறார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பாக இதே துறைமுகத்தில் தண்ணீருக்குள் சிக்கிக்கொண்ட குதிரை ஒன்றை ரிக்கும் வேறு சிலரும் சேர்ந்து மீட்டனர்.