ஏமன் ஆயுத கிடங்கில் ராக்கெட் வீச்சு: 45 ஐக்கிய அரபு எமிரேட் ராணுவ வீரர்கள் கருகி பலி!

259

da2872bb-918f-4631-8fe8-cda4de9993a0_S_secvpf

ஏமனில் கடந்த 6 மாதமாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஷியா பிரிவை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையிலான ஐக்கிய அரபு எமிரேட் ராணுவம் முகாமிட்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

எனவே, அவர்கள் கிழக்கு மாகாணத்தில் உள்ள மாரிப் ராணுவ தளத்தில் தங்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று அங்குள்ள ஆயுத கிடங்கில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.

இதனால் அங்கிருந்த குண்டுகள், ராக்கெட் குண்டுகள், வெடி பொருட்கள் வெடித்து சிதறி தீப்பிடித்தன. அதில் அங்கு தங்கியிருந்த ஐக்கிய அரபு எமிரேட்டை சேர்ந்த 45 வீரர்கள் உடல் கருகி பலியாகினர்.

ஏமனில் முகாமிட்ட 6 மாதத்தில் நடந்த தாக்குதலில் ஐக்கிய அரபு எமிரேட் ராணுவத்துக்கு இதுவே மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது. எனவே, அங்கு 3 நாள் அரசு துக்கம் கடைபிடிக்கப்பட்டுள்ளது.

ராணுவ ஆயுத கிடங்கில் தற்செயலாக நடந்த வெடி விபத்து என ஏமன் அரசு தெரிவித்துள்ளது. ஆனால் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாங்கள் ராக்கெட் வீச்சு தாக்குல் நடத்தி ஆயுத கிடங்கை அழித்தாக தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே பக்ரைன் நாட்டை சேர்ந்த 5 ராணுவ வீரர்களும் ஏமனில் நேற்று கொல்லப்பட்டனர். இவர்கள் சவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் பலியாகினர்.