அகதிகளின் குடும்பங்களுக்கு தஞ்சம் கொடுங்கள் போப்பாண்டவர் பிரான்சிஸ் உருக்கமான வேண்டுகோள்!

293
7056
ஐரோப்பாவிலுள்ள ஒவ்வொரு திருச்சபையும் மதசமூகமும் ஆளுக்கொரு அகதிகள் குடும்பத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என புனித பாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிரியா, ஆப்கானிஸ்தான், எகிப்து என உள்நாட்டுப்போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் அகதிகளை ஐரோப்பிய நாடுகள் ஏற்க மறுத்து வந்தன.
இந்த நிலையில், துருக்கியில் அகதிகள் வந்த படகுகள் விபத்துக்குள்ளான சம்பவத்தில் பச்சிளங்குழந்தைகள் பலியானதில், அய்லான் என்ற குழந்தையின் உடல், கரை ஒதுங்கிக்கிடந்த துயரமான காட்சி, உலகையே உலுக்கியது.
அதைத் தொடர்ந்து ஆஸ்திரியா, ஜேர்மனி, அவுஸ்திரேலியா என பல நாடுகள் அகதிகளை ஏற்க முன் வந்துள்ளன.இந்த நிலையில் போப் ஆண் டவர் பிரான்சிஸ், வத்திக்கானில் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மத்தியில் வழக்கம்போல நேற்று முன்தினம் உரையாற்றி விட்டு, அகதிகள் பிரச்சினை குறித்தும் பேசினார்.
அப்போது அவர், ஐரோப்பாவில் உள்ள ஒவ்வொரு திருச்சபையும், மத சமூகமும், துறவி மடமும், சரணாலயமும் ஆளுக்கொரு அகதிகள் குடும்பத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்’’ என உருக்கமுடன் வேண்டுகோள் விடுத்தார். அதை மக்கள் கைதட்டி வரவேற்றனர்.
சொன்னதை செயற்படுத்தும் விதத்தில், ‘வத்திக்கானில் உள்ள 2 திருச்சபைகள், தலா ஒரு அகதி குடும்பத்தை எடுத்துக்கொள்ளும்’ எனவும் அவர் அறிவித்தார்.