வவுனியா கோவில்குளம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலய தேர்த்திருவிழா (படங்கள், காணொளி)

444

வவுனியா கோவில் குளத்தில் பள்ளிகொள்ளும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஸ்ணு ஆலய வருடாந்த பிரம்மோற்சவத்தில் இன்று (26.09.2015 சனிக்கிழமை ) காலை தேர்த்திருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றது.

இன்றுகாலை உற்சவம் ஆரம்பமாகி காலையில் வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் இருந்து பக்தர்கள் பாற்குட பவனியாக வந்து அந்த பாலில் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணுமூர்த்திக்கு அபிசேகம் நடைபெற்று ஒன்பது மணியளவில் தம்பப் பூசை இடம்பெற்று தொடர்ந்து ஒன்பதரை  மணிக்கு வசந்தமண்டப பூசை இடம்பெற்று பத்து  மணியளவில் உள்வீதி வலம் வந்து பத்தரை மணியளவில் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு பகவான் தேரில் ஆரோககணி த்தருளினார்.

தொடந்து எம்பெருமான் ரதத்தை ஒரு புறம் ஆண் பக்தர்களும் மறுபுறம் பெண் பக்தர்களும் இழுத்து வர சரியாக காலை பதினோன்றரைமணியளவில் இருப்பிடத்தை வந்தடைந்தார். அதன்பின் அர்ச்சனைகள் இடம்பெற்று தொடந்து பச்சை சாத்தும் நிகழ்வும் இடம்பெற்றது. மேற்படி உற்சவத்தில் வவுனியாவின் பல பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான மஹா விஷ்ணுவின் பக்கதர்கள் கலந்து கொண்டனர்.

-பிரதேச நிகழ்வுகளுடன் கஜன்

20150926_094729 20150926_094740 20150926_094809 20150926_094900 20150926_095006 20150926_095317 20150926_095323 20150926_095518 20150926_095543 20150926_095547 20150926_100123 20150926_100218 20150926_100851 20150926_101055 20150926_101355 20150926_101452 20150926_101547 20150926_101604 20150926_101708 20150926_101919 20150926_101923 20150926_102307 20150926_102507 20150926_102710 20150926_102734 20150926_102801 20150926_104059 20150926_104446 20150926_104730 20150926_104735 20150926_104837 20150926_104922 20150926_105033 20150926_112930 20150926_113017 20150926_113029 20150926_113414