புதுக்குடியிருப்பு இரணைப்பாலை மகாவித்தியாலயத்தின் பரிசளிப்பு நிகழ்வும் சிறுவர் தினமும்!!(படங்கள்)

816

புதுக்குடியிருப்பு இரனைப்பாலை மகாவித்தியாலத்தில் கடந்த வருடம் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் சர்வதேச சிறுவர்தின நிகழ்வும் 01.10.2015 அன்று 10.30 மணிக்கு புதுக்குடியிருப்பு இரனைப்பாலை மகாவித்தியாலத்தின் அதிபர் ஜெபநேசன் தலைமையில் இடம் பெற்றன முன்னதாக மாணவர்களின் வான்ட் வாத்திய அணிவகுப்புடன் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டனர்.

தேசியசுடரினை வன்னிமாவட்ட பாராளமன்ற உறுப்பினர் கௌரவ வைத்திய கலாநிதி சி.சிவமோகன் ஏற்றி வைக்க கல்விச்சுடரினை முல்லைத்தீவு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி.முனீஸ்வரன் ஏற்றி வைக்க அருள்சுடரினை இரனைப்பாலை பங்குத்தந்தை அருட்செல்வன் அடிகளார் ஆகியோர் ஏற்றிவைத்தனர்.

மாணவர்களின் வரவேற்பு நடனத்தை தொடர்ந்து மாணவர்களுக்கான பரிசளிப்பு இடம்பெற்றன மாணவர்களுக்கான பரிசில்களை வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வைத்திய கலாநிதி சி.சிவமோகன் முல்லைத்தீவு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி.முனீஸ்வரன் இரனைப்பாலை பங்குத்தந்தை அருட்செல்வன் அடிகளார், முன்னாள் இரனைப்பாலை பாடசாலை அதிபர் ஜெபநேசன், பாடசாலை அதிபர் நேவிட் ஜீவராசா ஆகியோர்கள் வழங்கி வைத்தனர்.

தொடர்ந்து கருத்துரைகளை முன்னாள் பாடசாலை அதிபர் ஜெபநேசன் முல்லைத்தீவு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி.முனீஸ்வரன் வழங்க சிறப்புரையினை வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வைத்திய கலாநிதி சி.சிவமோகன் வழங்கினார். அவர் தனது உரையில்..

இன்று இப்பாடசாலையில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பும் சர்வதேச சிறுவர்தின நிகழ்வில் உங்களோடு இந்த நிகழ்வில் கலந்து கொள்வதையிட்டு பெரும் மகிழ்வடைகிறேன். இன்று பரிசில்களை பெறுவதற்காக மலர்ந்த முகத்துடன் இவ் மாணவர்கள் வீற்றிருக்கின்றனர். இவ் மாணவர்கள் போன்று இங்கு இருக்கின்ற மாணவர்களும் எதிர்வரும் காலத்தில் வெற்றியீட்டிய மாணவர்களாக மாறி இப் பாடசாலைக்கும் எமது தேசத்திற்கும் பெருமை சேர்ப்பவர்களாக மாறி வருவதற்கு இவ் மாணவர்களின் பெற்றோர்களும் இவ்மாணவர்களின் வெற்றிக்காக உழைத்த ஆசிரியர்களும் இன்னும் அயராது உழைக்கவேண்டும்.

எமது சமுதாயத்தின் கலாச்சாரம் எமது சிறுவர்களின் கையில் உள்ளது. ஒட்டுமொத்தமாக சிறுவர்களின் கலாச்சாரம் எமது ஆசிரியர் சமுதாயத்தின் கையில் உள்ளது. எமது தாயக கலாச்சாரம் பண்பாடுகளோடு வாழ்ந்த தேசம் இன்று போதைப்பொருள் கலாச்சாரம் இளஞர்களிடம் தலைதூக்கியுள்ளது. அந்த வகையில் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்ந்து நடைபெறுகின்றன. வித்தியா தொடக்கம் சேயா வரை சென்று இருக்கின்றன. போதைப்பொருள் முற்றாக சுத்திகரிக்கப்படவேண்டும். சுத்திகரிக்கப்பட்டு இந்த நாட்டை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இந்த புதிய நல்லினக்க அரசின் கையில் உள்ளது.

கொடுர யுத்தம் நடந்த பின் பல ஆயிரக்கணக்கான மக்கள் அநியாயமாக கொள்ளப்பட்டனர். பல ஆயிரம் சிறுவர்கள் இந்த மண்ணில் கொல்லப்பட்டார்கள். இந்த இடத்தில் இன்னும் எத்தனையோ மழலைகள் சந்திக்க வேண்டிய மண் வெற்றிடமாக்கப்பட்டுள்ளது. இந்த சிறார்களின் எதிர் காலத்திற்காகத்தான் பல ஆயிரம் போராளிகள் இந்த மண்ணிலே மாவீரர்கள் ஆனார்கள். அந்த வரலாறுகளை இந்த சிறார்கள் தெரிந்து கொள்ள முடியாத நிலை இந்த அரசு மேற்கொண்டது. மேற்கொன்டும் வருகிறது.

அதில் ஒருகட்டம் எமது புனித வீரர்களின் கல்லறைகள் இல்லாது ஒளிக்கப்பட்டுள்ளன. இதன் முலம் தமிழர் விடுதலைப் போராட்டம் ஒன்று இருந்ததா. என்ற எமது சிறுவர் சமுதாயத்தை கேட்க வேண்டிய நிலை உள்ளது. எனவே சிறுவர் உரிமைகளை பாதுகாத்து கொள்ள அனைவரும் இன்றை நாளில் உறுதி எடுக்கப்படவேண்டும் என்றார்.

DSC_8918 DSC_8919 DSC_8926 DSC_8929 DSC_8934 DSC_8936 DSC_8937 DSC_8940 DSC_8941 DSC_8951 DSC_8955 DSC_8958 DSC_8964 DSC_8969