மின்சார கதிரைக்கும் “ஹைபிரிட்” விசாரணைக்கும் முற்றுப்புள்ளி: ஜனாதிபதி!!

264


1 (67)

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­ல­கத்தின் இலங்கை தொடர்­பான அறிக்கை மற்றும் ஜெனி­வாவில் நிறை­வேற்­றப்­பட்ட அமெ­ரிக்­காவின் பிரே­ரணை உள்­ளக விசா­ரணை பொறி­முறை தொடர்­பாக விரைவில் சர்­வ­கட்சி மாநாட்டை கூட்டி கலந்­து­ரை­யா­ட­வுள்­ள­தாக ஐனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அறி­வித்தார்.



மின்­சாரக் கதி­ரைக்கும் “ஹைபிரிட்” விசா­ர­ணைக்கும் முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட்டு இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்­திற்கு உட்­பட்ட உள்­ளக விசா­ர­ணைக்கு இன்று வித்­தி­டப்­பட்­டுள்­ளது. புலம்­பெயர் ஈழ வாதி­களது 37 அமைப்­புக்­களின் சர்­வ­தேச விசா­ர­ணைக்­கான வலி­யு­றுத்­தலை அர­சாங்கம் தகர்த்­துள்­ளது. அதற்­காக பிர­த­ம­ருக்கும் அமைச்­ச­ர­வைக்கும் எனது நன்­றியை தெரி­வித்துக் கொள்­கின்றேன் என்றும் ஜனா­தி­பதி மேலும் குறிப்­பிட்டார்.

ஐ.நா.வின் 70 ஆவது வரு­டாந்த பொதுச் சபைக் கூட்­டத்தில் கலந்­து­கொண்­டு­விட்டு நேற்று வெள்­ளிக்­கி­ழமை நாடு திரும்­பிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கொழும்பு கோட்­டை­யி­லுள்ள ஜனா­தி­பதி மாளி­கையில் நேற்­றி­ரவு நடத்­திய விசேட செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறினார் . இரவு 7.15 ஆரம்­பித்த ஜனா­தி­ப­தியின் உரை இரவு 8.15 மணி­ய­ளவில் நிறைவு பெற்­றது.



ஜனா­தி­பதி இங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,
ஐ.நா. அறிக்கை மற்றும் ஜெனி­வாவில் நிறை­வேற்­றப்­பட்ட அமெ­ரிக்­காவின் பிரே­ரணை மற்றும் உள்­ளக விசா­ரணை என்­பன தொடர்பில் தனித்து எந்­த­வி­த­மான தீர்­மா­னத்­தை­யும நான் மேற்­கொள்ள மாட்டேன். பிர­தமர் மற்றும் அமைச்­ச­ர­வை­யுடன் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தியே தீர்­மானம் எடுப்பேன்.



அது­மட்­டு­மல்­லாது சில தினங்­களில் சர்­வ­கட்சி மாநாட்டைக் கூட்டி அனைத்துக் கட்­சி­க­ளு­டனும் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி இந்த விட­யங்கள் குறித்து ஆலோ­ச­னை­களை பெற்றுக் கொள்வேன்.மேலும் விரைவில் பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்­தவ என அனைத்து மதத்­தி­ன­ரையும் சார்ந்த மாநாட்டை நடத்­து­வுள்­ள­துடன் அவர்­க­ளது ஆலே­ச­னை­களை பெற்றுக் கொள்வேன்.


நாட்­டுக்­குள்ளும் வெளி­நா­டு­க­ளிலும் வாழும் இலங்­கையின் கல்­வி­மான்­களை அழைத்து கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­தவும், ஆலே­ச­னை­களை பெறவும் உத்­தே­சித்­துள்ளேன்.சில அடிப்­படை வாதி­களும், இன­வா­தி­களும், பெய்­யான தேசப்­பற்­றா­ளர்­களும் அர­சியல் தலை­வர்கள் சிலர் மின்­சாரக் கதி­ரைக்கு போக நேரிடும் என்றும் நான் அமெ­ரிக்­காவின் பக­டைக்காய் என்றும், இந்த ஆட்சி அமெ­ரிக்­காவின் சூழ்ச்­சியால் அதி­கா­ரத்தை பிடித்த ஆட்சி என்றும் பிரச்­சாரம் செய்­தனர். ஆனால் நாம் யார் என்ற உண்­மையை வெகு­வி­ரைவில் எதிர்­கா­லத்தல் வெளிப்­ப­டுத்­துவோம்.

ஐ.நா. அறிக்­கையில் பரிந்­து­ரைக்­கப்­பட்ட ஹைபி­ரிட்டை (கலப்பு நீதி­மன்ற விசா­ரணை) இறு­திக்­கட்ட ஜெனிவா பிரே­ர­ணையில் நாங்கள் இல்­லாமல் செய்தோம். எந்த சந்­தர்ப்­பத்­திலும் விசா­ர­ணை­களில் சர்­வ­தேசத் தலை­யீடு இருக்கப் போவ­தில்லை.
இலங்­கையின் அர­சியல் அமைப்பு மற்றும் சட்­ட­வ­ரை­ய­ரைக்குள் நாட்­டி­னதும் மக்­க­ளி­னதும் இறை­யான்மை மீறப்­ப­டாத வகையில் விசா­ர­ணைகள் நடத்­தப்­படும். அனைத்து செயற்­பா­டு­களும் இலங்­கையின் சட்­ட­வ­ரை­ய­ரைக்குள் உட்­பட்­ட­தாக இருக்கும்.
யுத்தம் முடிந்­த­பின்னர் கடந்த ஐந்து வரு­டங்­கா­ளக சர்­வ­தேசம் எமக்­கெ­தி­ரா­கவே செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­தது. இலங்­கைக்கு ஐ.நா.விலோ, சர்­வ­தேச ரீதி­யிலோ ஒத்­து­ழைப்பு கிடைக்­க­வில்லை.


பிர­பா­க­ர­னையும், விடு­த­லைப்­பு­லிகள் அமைப்­பையும், பயங்­க­ர­வா­தத்தை ஒழிப்­ப­தற்கும் யுத்­தத்தை வெற்றிக் கொள்­ளவும் இந்­தியா, சீனா, பாகிஸ்தான், அமெ­ரிக்கா போன்ற நாடுகள் எமக்கு உதவி செய்­தன. யுத்தம் முடிந்த பின்னர் இந்த நாடுகள் எமக்­கெ­தி­ராக மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்­டுக்­க­ளையும், யுத்­தக்­குற்­றச்­சாட்­டுக்­க­ளையும் முன்­வைத்­தன. வெளி­நா­டு­களில் வாழும் புலம் பெயர் புலிகள் அமைப்­பினர் இதற்­கான கடும் அழுத்­தங்­களை பிர­யோ­கித்­தனர்.

மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்­சியில் சர்­வ­தே­சத்­துடன் நட்­பு­றவு இருக்­க­வில்லை. அனை­வ­ரு­டனும் முரண்­பட்ட நிலை­மையே காணப்­பட்­டது. உலக நாடுகள் எமக்கு ஆத­ரவு வழங்­க­வில்லை. இவ்­வா­றா­னதோர் சூழ்­நி­லையில் எமக்­கெ­தி­ராக ஐ.நா.வில் பிரே­ர­ணைகள் முன்­வைக்­கப்­பட்­டன. உலகம், ஐ.நா. மனித உரி­மைகள் ஆணைக்­குழு என்­பன எமது நாட்டுப் பிரச்­சினை தொடர்பில் இரண்­டாகப் பிள­வு­பட்ட நிலைப்­பாட்­டி­லேயே காணப்­பட்­டன.

மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் பொரு­ளா­தார தடை விதிக்­கப்­படும் ஆபத்தும் காணப்­பட்­டது. அதற்கு முன் ஏற்­பா­டாக ஜீ.எஸ்.பி. வரிச்­ச­லுகை நீக்கம், ஐரோப்­பியன் ஒன்­றி­யத்தின் மீன் இறக்­கு­மதி தடை போன்­றன விதிக்­கப்­பட்­டன.
இவ்­வா­றா­னதோர் சூழ்­நி­லை­யி­லேயே நான் ஜனா­தி­பதி தேர்­தலில் கள­மி­றங்­கினேன். இதன்­போது எதிர்­த­ரப்­பினர் நான் யுத்­தத்தை முடித்த தலை­வர்­க­ளை­யும, படை­யி­ன­ரையும், மின்­சாரக் கதி­ரையில் அமர வைக்­கப்­போ­கின்றேன் என குற்றம் சாட்­டி­னார்கள். ஆனால் மக்கள் இந்த குற்­றச்­சாட்டை நிரா­க­ரித்து என்னை ஜனா­தி­ப­தி­யாக்­கி­னார்கள் .

அதன்­பின்னர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் ஆட்­சி­ய­மைத்து இந்த நிலை­மையை மாற்­று­வ­தற்­கான பய­ணத்தை ஆரம்­பித்தோம். அதன் முதற்­ப­டி­யாக 19 ஆவது திருத்­தத்தை நிறை­வேற்றி எனக்­குள்ள நிறை­வேற்று அதி­கா­ரங்கள் சில­வற்றை குறைத்தேன். சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களை நிறு­வு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்தேன். நாட்டில் ஜன­நா­ய­கத்­தையும் மனித உரி­மை­க­ளை­யும பாது­காத்தோம்.


காணாமல் போதல், கொலைகள், மோதல்கள், தாக்­கு­தல்கள் இல்­லாத ஜனா­நா­யத்­து­ட­னான நல்­லாட்­சியை உரு­வாக்­கினோம். ஜன­வரி 8 ஆம் திகதி இந்த புரட்­சி­யினை உரு­வாக்­கினோம். அதன்­பின்னர் ஆகஸ்ட் 17 ஆம் திக­தியின் பின்னர் தேசிய அர­சாங்கம் ஒன்றை ஏற்­ப­டுத்தி அர­சியல் இணக்­கப்­பாட்டை நிறு­வினோம்.

இதன்­மூலம் சர்­வ­தேச ஆத­ரவு கிடைத்­தது. எமது நட­வ­டிக்­கையை சர்­வ­தேசம் வர­வேற்­றது. மின்­சாரக் கதிரை என்ற பேச்­சுக்கே இனி நாட்டில் இட­மில்லை. இந்த ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டி­ருக்­கா­விட்டால் பயங்கரமான நிலைமைகளை சந்திக்க நேர்ந்திருக்கும்.

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்கள் உட்பட அனைவருக்கும் நட்டஈடுவழங்கப்பட வேண்டும். தருஷ்மண் அறிக்கை, நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை, உதாலாகம ,பரணகம, ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை ஆராய்ந்து உள்ளக விசாரணைகள் மேற்கொள்வோம்.

ஜெனிவா பிரேரணை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் போது எமது மக்கள் நெருக்கடிகளை சந்திப்பார்களானால் அது தொடர்பில் மக்களுக்கு சார்பான நிலைமைகளை முன்னெடுப்போம். நியாயமான , நீதியான தீர்வை பெற்றுக் கொடுப்போம். நாட்டு மக்களுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் எவ்விதமான பிரச்சினையுமின்றி சுமூகமான நிலைமைய உருவாக்குவோம் என்றார்.