வாகனக் கொள்வனவிற்கான லீசிங் வசதி 90% வரை அதிகரிப்பு!!

346

Ravi-karunanayake-720x480மோட்டார் வாகன லீசிங் சம்பந்தமாக நிதி நிறுவனங்கள் பின்பற்றப்பட வேண்டிய புதிய முறைமைக்கமைய, வாகனங்களுக்கு வழங்க வேண்டிய லீசிங் வசதி, வாகனங்களின் சந்தைப் பெறுமதியில் நூற்றுக்கு 70 வீதத்தில் இருந்து 90 வீதம் வரை அதிகரிக்கப்ட்டுள்ளது.

நிதிச் சபையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைய, வாகனங்களின் சந்தைப் பெறுமதியில் நூற்றுக்கு 70 வீதம் மட்டுமே லீசிங் வசதி வழங்க முடியும் என்ற சுற்றரிக்கை ஒன்று இலங்கை மத்திய வங்கியினால் அண்மையில் வௌியிடப்பட்டது.

இதன்படி வாகனம் ஒன்றை கொள்வனவு செய்வோர் 30 வீத பணத்தை கட்டாயம் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. எவ்வாறாயினும் இந்த முறையை மாற்றி வாகனங்களின் சந்தைப் பெறுமதியில் நூற்றுக்கு 90 வீதம் வரை லீசிங் வசதி பெற முடியும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

இதன்படி வாகனங்களின் சந்தைப் பெறுமதியில் 10 வீத பணத்தை செலுத்துவதன் மூலம் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்ய முடியும். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் ரவி கருணாநாயக்க இதனைத் தெரிவித்தார்.