தென்னாபிரிக்காவிடம் வீழ்ந்தது இந்தியா!!

272


f15fdfdfsdfஇந்­தியாவுக்கு எதிரான முத­லா­வது இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் போட்­டியில், டிவி­லியர்ஸ் மற்றும் டுமி­னியின் அதி­ரடி ஆட்­டத்தால் 7 விக்­கெட்­டுக்கள் வித்­தி­யா­சத்தில் வெற்­றி­பெற்­றது தென்­னா­பி­ரிக்கா.

இந்­தியாவின் இமாச்­சல பிர­தேச தர்­ம­சா­லாவில் இந்­தியா –- தென்­னா­பி­ரிக்க அணிகள் மோதிய முத­லாவது இரு­ப­துக்கு 20 போட்­டியில் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்ற தென்­னா­பி­ரிக்க அணி, முதலில் இந்­தி­யாவைத் துடுப்­பெ­டுத்­தா­டும்­படி பணித்­தது.
அதன்­படி முதலில் கள­மி­றங்­கிய இந்­தியா நிர்­ண­யிக்­கப்­பட்ட 20 ஓவர்­களில் 5 விக்­கெட்­டுக்­களை இழந்து 199 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்­டது.



இதில் ஆரம்பத் துடுப்­பாட்ட வீர­ராகக் கள­மி­றங்­கிய ரோஹித் ஷர்மா 66 பந்துகளில் 106 ஓட்­டங்­களை விளாசி அசத்­தினார். தவான் 3 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்தார். விராட் கோஹ்லி 43 ஓட்­டங்­களை விளா­சினார். அணித் தலைவர் டோனி ஆட்­ட­மி­ழக்­காமல் 20 ஓட்­டங்­களைப் பெற்றார். இறு­தியில் இந்­தியா 5 விக்­கெட்­டுக்கள் இழப்­பிற்கு 199 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்­டது.

200 ஓட்­டங்கள் என்ற வெற்றி இலக்­கோடு கள­மி­றங்­கிய தென்­னா­பி­ரிக்க அணி 3 விக்­கெட்­டுக்­களை மாத்­திரம் இழந்து 19.4 ஓவர்­களில் இலக்கை எட்டி வெற்­றி­கொண்­டது.
தென்­னா­பி­ரிக்க அணியின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளாக அம்லா மற்றும் அதி­ரடி வீரர் டிவி­லியர்ஸ் கள­மி­றங்­கினர்.



வந்த வேகத்­தி­லேயே இரு­வரும் அதி­ர­டியில் இறங்­கினார். இதனால் தென்­னா­பி­ரிக்க அணி 5 ஓவர்கள் முடிவில் 60 ஓட்­டங்­களைப் பெற்­றது. இந்­நே­ரத்தில் அம்லா 36 ஓட்­டங்­க­ளுடன் ரன் அவுட் ஆனார்.



அதன்­பி­றகு டுபி­ளஸிஸ் கள­மி­றங்­கினார். அவரும் வந்­த­வே­கத்­தி­லேயே 4 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்தார். அதன்­பி­றகு டுமினி கள­மி­றங்­கினார்.முறு­மு­னையில் அதி­ர­டியைத் தொடர்ந்­து­கொண்­டி­ருந்த டிவி­லியர்ஸ் 51 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்க டுமி­னி­யுடன் ஜோடி சேர்ந்தார் பெஹார்தின். இரு­வரும் அபா­ர­மாக ஆடி அணியை வெற்­றிப்­பா­தைக்கு அழைத்­துச்­சென்­றனர்.


இறு­தியில் 19.4 ஓவர்­களில் 3 விக்­கெட்­டுக்­களை மாத்­திரம் இழந்து 200 ஓட்­டங்­களைப் பெற்று, இந்தியாவை சொந்த மண்ணிலேயே வீழ்த்தியது தென்னாபிரிக்கா.
டுமினி 68 ஓட்டங்களுடனும், பெஹார்தின் 32 ஓட்டங்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். போட்டியின் நாயகனாக டுமினி தெரிவுசெய்யப்பட்டார்.