தனியார் துறை ஊழியர் சம்பள உயர்வுக்கான சட்டமூலம் விரைவில் நிறைவேற்றபடும்-ஜோன் சென­வி­ரத்ன!

406

budget-

தனியார் துறை ஊழி­யர்­க­ளது சம்­ப­ளத்தை 2,500 ரூபாவால் அதி­க­ரிக்க வேண்­டு­மென வேலை கொள்­வோரை கட்­டா­யப்­ப­டுத்தும் சட்ட மூலத்தை விரைவில் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­க­வுள்­ள­தாக தொழில் மற்றும் தொழிற்­சங்­கங்­களின் தொடர்­பாடல் அமைச்சர் ஜோன் சென­வி­ரத்ன தெரி­வித்­துள்ளார்.

இடைக்­கால வரவு செல­வுத்­திட்­டத்தில் தனியார் துறை ஊழி­யர்­களின் சம்­பளம் 2,500 ரூபாவால் அதி­க­ரிக்கும் படி ஆலோ­சனை தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. இருந்தும் இந்த ஆலோ­ச­னைக்கு சட்ட அதி­காரம் இல்­லா­த­ப­டியால் வேலை கொள்வோர் பலர் சம்­பள அதி­க­ரிப்பை வழங்­க­வில்லை.

இதை­ய­டுத்து 2,500 ரூபா சம்­பள அதி­க­ரிப்பை கட்­டா­யப்­ப­டுத்தி சட்ட மூலமொன்றை கொண்டு வரவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.