சுற்றுச்சூழலுக்கு நன்மை தரும் புதிய நல்லடக்க செயன்முறை!!

358


inteசுற்­றுச்­சூ­ழ­லுக்கு நன்மை பயக்கும் முறையில் சட­லங்­களை நல்­ல­டக்கம் செய்­வ­தற்­கான புதிய முறை­மை­யொன்றை இரு வடி­வ­மைப்­பா­ளர்கள் உரு­வாக்­கி­யுள்­ளனர். இத்­தா­லிய வடி­வ­மைப்­பா­ளர்­களான அனா சிற்­றலி மற்றும் ராவோல் பிரெட் ஸெல் ஆகி­யோரால் இந்த புதிய முறைமை உரு­வாக்­கப்­பட்டு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­ டுள்­ளது.

இந்தப் புதிய முறை­மையின் கீழ் சட­லங்­களை இராட்­சத பிரி­கை­ய­டை­யக்­கூ­டிய கொள்­க­லங்­களில் தனித்­த­னி­யாக வைத்து மண்ணில் புதைக்கப்படுகின்றன. பின்னர் அந்தக் கொள்க­லங்­க­ளுக்கு மேலாக புதிய மரக்­கன்­று­கள் நடப்படும்.இந்­நி­லையில் வளரும் அந்த மரங்­க­ளுக்கு கொள்­க­லங்­க­ளி­லுள்ள சட­லங்கள் போஷ­ணை­யா­கப் ­பயன்படும்.



இந்த புதிய முறைமை கல்­ல­றை­களைக் கொண்ட மயா­னங்­களின் உரு­வாக்­கத்­திற்கு பதி­லாக நல்­ல­டக்க காடுகள் விருத்­தி­யா­வ­தற்கு வழிவகை செய்து சுற்றுச்சூழலுக்கு நன்மை பயப்பதாக அமையும் என அந்த வடிவமைப்பாளர்கள் கூறுகின்றனர்.