வவுனியாவை வந்தடைந்த வித்தியா – சேயா கொலையாளிகளுக்கு எதிரான பாதயாத்திரை!!

263

மாணவி வித்தியா, சிறுமி சேயா கொலையாளிகளுக்கு தூக்குத்தண்டனை வழங்கக்கோரி இலங்கை போக்குவரத்து சபையினரின் ‘யாழிலிருந்து கொழும்பு வரையான பாதயாத்திரை’ வவுனியா மத்திய பேருந்து நிலையத்தை நேற்று (06.10.2015) வந்தடைந்தது.

பாதயாத்திரையில் கலந்துகொண்டவர்களை குளிர்பானம் வழங்கி வரவேற்ற வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தனது ஆதரவை தெரிவித்து கையெழுத்திட்டார்.

நேற்று முன்தினம் (05.10.2015) காலை 7.00 மணிக்கு யாழ். மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பித்த பாதயாத்திரை நேற்று (06.10.2015) மாலை 5.00 மணிக்கு வவுனியா மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. இன்று (07.102.015) காலை 7.00 மணியளவில் வவுனியா மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கொழும்பை நோக்கிய பாதயாத்திரை ஆரம்பமானது.

இப்பாத யாத்திரைக்கு தலைமையேற்றுச்செல்லும் கொழும்பு பிரதான செயலாற்று அத்தியட்சகரும், யாழ். பிராந்திய முகாமையாளருமான உபாலி கிரிவத்துடுவாவுடன், யாழ். பிராந்திய செயலாற்று பிரதான முகாமையாளர் கேதீஸ்வரன், பிரதான நிதி முகாமையாளர் அழகேசன், சாலை முகாமையாளர் குணபாலசெல்வம், வடமாகாண சாலை முகாமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆதரவு தெரிவித்து பாதயாத்திரையை தொடர்கின்றனர்.

தொடர்புபட்ட செய்தி மாணவி வித்தியா, சிறுமி சேயா கொலைக் குற்றவாளிகளுக்கு மரணதண்டனையை உடன் நிறைவேற்றக்கோரி யாழிலிருந்து கொழும்புக்கு பாத யாத்திரிரை!!

a1 a2 a3 a4 a5 a6 a7 a8 a9 a10 a11