வவுனியாவில் நடைபெற்ற உணவு தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு!!(படங்கள்)

371

வவுனியா முருகனூரில் உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டத்தில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந் நிகழ்வினை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப விழாவானது கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடு, வட்டகச்சியில் 05.10.2015 அன்று இடம்பெற்றது. அதற்கு இணையாக வவுனியா மாவட்டத்தில் முருகனூரில் நேற்று முன்தினம் (05.10.2015) காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.

இதில் திரு. M.K.பந்துல ஹரிச்சந்திரா (மாவட்ட செயலாளர் வவுனியா), அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

மற்றும் வவுனியா மாவட்ட பிரதேச செயலாளர், கிராமசேவையாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்கள் உரையாற்றுகையில்..

வீட்டுத் தோட்டங்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் மக்கள் தங்களது நாளந்த தேவைகளுக்கு வீட்டுத் தோட்டத்திலேயே பயிர்செய்து அதன்மூலம் தமது தேவைகளை பூர்த்தி செய்யலாம். ஓவ்வொரு மனிதனும் தனது சுய முயற்சியாக வீட்டுத்தோட்டத்தை மேற்கொள்ள வேண்டும் செயற்கை இராசாயனங்கள் பாவிப்பதை இயன்றளவு தவிர்த்து இயற்கையாக பெறக்கூடிய இராசாயனங்களை பாவித்து எமது தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் மரக்கறி வகைகள் என்றாலும் சரி வேறு உணவுப்பொருட்கள் என்றாலும் சரி அதனை நாம் உண்பதால் நோய்களில் இருந்து பாதுகாக்கப்படுவோம்.

அதுமட்டுமல்லாமல் எமது பொருன்மிய மேம்பாடுகளில் வளச்சியடைய முடியும் என குறிப்பிட்டார். தொடர்ந்து உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டத்தின் தொடர்ச்சியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவராலும் அண்ணாசி கன்றுகள் நடப்பட்டன. இந் நிகழ்வில் பொது அமைப்புகள் இளைஞர்கள் கிராமமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

DSC_9096 DSC_9107 DSC_9108 DSC_9110 DSC_9111 DSC_9117 DSC_9122 DSC_9130