வவுனியா புதையல் விவகாரம் : முன்னாள் பொலிஸ்மா அதிபரின் விளக்கமறியல் நீடிப்பு!!

309


Capture

வவுனியா பிரதேசத்தில் கடந்த மாதம் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட, வவுனியா மாவட்ட முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் யூ.கே.திஸாநாயக்க மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகரை தொடர்ந்தும் எதிர்வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



சந்தேகபர்கள் இருவரும் இன்று (07.10.2015) புதன்கிழமை வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதவான் வீ.இராமகமலன் இவ் உத்தரவை பிறப்பித்தார்.

வவுனியா குடாக்கச்சி பிரதேசத்தில் புதையல் தோண்டியதாக குற்றஞ்சாட்டப்பட்ட இவர்கள், கடந்த செப்டெம்பர் மாதம் 19ம் திகதி சட்டத்தரணி ஊடாக கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவிடம் சரணடைந்தார்.



இதனையடுத்து அவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் வழக்கு விசாரணை வவுனியா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.



குறித்த சம்பவம் தொடர்பாக இவர்களுடன் மொத்தம் 9 பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில், கடந்த செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து தண்டப்பணம் விதித்து பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.