முரளிக் கிண்ணம் ஆரம்பம்!!

287

murali-cup1

முரளிக் கிண்ணம் 2015 கிரிக் கெட் சுற்றுப் போட்டி நேற்று கிளி­நொச்சி மத்­திய கல்­லூரி மைதா­னத்தில் ஆரம்­ப­மா­கி­யது.நேற்று காலை ஆரம்­ப­மான இந்தத் தொட­ருக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்­சத்­திர வீரர் குமார் சங்­கக்­கார விசேட அதி­தி­யாக கலந்­து­கொண்டு முத­லா­வது போட்­டியை ஆரம்­பித்து வைத்தார்.

யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, மாங்­குளம் போன்ற இடங்­களில் நடை­பெ­று­கின்ற இப்போட்­டியில் 24 அணிகள் பங்­கு­பற்­று­கின்­றன. மாங்­குளம் மைதா­னத்தில் முரளிக் கிண்ணம் கிரிக்­கெட்டின் பெண்­க­ளுக்­கான போட்டி நடை­பெற்­றது.

கிளி­நொச்­சியில் நடை­பெற்ற முத­லா­வது போட்டி கிளி­நொச்சி அணி­யி­ன­ருக்கும், கொழும்பு ஆனந்தா கல்­லூ­ரிக்கும் இடையில் நடை­பெற்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. இதன் போது கிளி­நொச்­சியில் தெரிவு செய்­யப்­பட்ட 20 மாண­வர்­க­ளுக்கு நற்­குணம் முன்­னேற்ற அமைப்­பினால் வழங்­கப்­பட்ட துவிச்சக்கர வண்டிகளை
மாணவர்களிடம் சங்கக்கார கையளித்தார்.