ஈய அணுக்களும் புரோத்தங்களும் மோதி மிகவும் சிறிய திரவ துளிகள் உருவாக்கம்!!

313


tec_0

பிர­பஞ்சம் தோன்­று­வ­தற்கு கார­ண­மாக அமைந்த பிர­ளயம் எவ்­வாறு ஏற்பட்டது என்­பதைக் கண்­ட­றியும் முக­மாக ஜெனிவா­விற்கு அருகில் கட­லுக்கு கீழ் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள பிர­ளயப் பரி­சோ­தனை உப­க­ர­ணத்தில் இது­வரை உரு­வா­கி­ய­வற்­றி­லேயே மிகவும் சிறிய திரவத் துளிகள் உரு­வா­கி­யுள்­ளன.



ஈய அணுக்­க­ளுடன் புரோத்­தன்­களை மோதவிட்ட போது இந்தப் பெறு­பேறு கிடைக்கப் பெற்­றுள்­ளது. இதன்போது சூரி­யனின் உள்­ள­டக்­கத்தை விடவும் 250,000 மடங்குகள் அதிக சூடான வெப்­ப­ம் தோன்­றி­யுள்­ளது.

இத்­த­கைய அதி உயர் வெப்­ப­நி­லை யில் எந்­த­வொரு திர­வமும் உட­ன­டி­யாக ஆவி­யா­கவே வாய்ப்­புள்ள நிலையில், எவ்­வாறு மிகவும் சிறிய இந்த திரவத் துளி உரு­வா­னது என்­பது தம்மை ஆச்­ச­ரி­ய­ம­டைய வைத்­துள்­ள­தாக விஞ்­ஞா­னிகள் கூறு­கின்­றனர்.



இந்த திரவத் து­ளிகள் ஐத­ரசன் அணுவை விடவும் 100,000 க்கும் அதி­க­மான மடங்கு சிறி­ய­தாகும்.இந்தத் துளிகள் வாயு நிலையை விட வும் தெளி­வான திரவ நிலையில் காணப்­பட்­ட­தாக விஞ்­ஞா­னிகள் கூறு­கின்­றனர்.



பிர­ளயம் தோன்­றி­ய­தை­ய­டுத்து எவ் ­வாறு பிரபஞ்சம் காணப்பட்டது என்பது தொடர்பான கருதுகோளை உருவாக்கு வதற்கு இந்தப் பரிசோதனை துணை புரியும் என விஞ்ஞானிகள் நம்புகின்ற னர்.