முற்று முழுதாக கார்ட்போட்டால் உருவாக்கப்பட்ட ஆடம்பர கார்!!

385

cardboard car

ஆடம்­பர கார்­களை உற்­பத்தி செய்யும் ஜப்­பா­னிய லெக்ஸஸ் நிறு­வ­ன­மா­னது முற்­று­மு­ழு­தாக கார்ட்­போர்ட்டால் ( கடி­ன­மான மட்டை) உரு­வாக்­கப்­பட்ட காரொன்றை தயா­ரித்து அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.

மேற்­படி நிறு­வனம் தனது ஆடம்­பர கார்­க­ளுக்­கான பிர­சார நட­வ­டிக்­கையின் ஓர் அங்­க­மா­கவே இந்தக் காரை உரு­வாக்­கி­யுள்­ளது. இந்தக் காரின் மேற்­ப­ரப்பு, செயற்­படும் கத­வுகள், முகப்பு விளக்­குகள், சக்­க­ரங்கள் அனைத்­துமே கார்ட்­போர்ட்டால் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன.

இது உலகில் கார்ட்­போர்ட் மட்­டையால் உரு­வாக்­கப்­பட்­டுள்ள செயற்­படும் முத­லா­வது கார் என்ற பெயரைப் பெறு­கி­றது. அதே­ச­மயம் இந்தக் காரில் உருக்கு மற்றும் அலு­மி­னிய கட்­ட­மைப்பில் மின் மோட்டார் உப­க­ர­ண­மொன்று பொருத்­தப்­பட்­டுள்­ளது. எனினும் இந்தக் காரை மழைக் காலத்தில் வீதிகளில் செலுத்திச் செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.