வவுனியாவில் பேருந்து ஒன்றினை கடத்தி இரும்புக்கு வெட்டி விற்றவருக்கு விளக்கமறியல்!!

1076

Arrest1

வவுனியா, நெளுக்குளம் பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை கடத்திச் சென்று இரும்புக்கு வெட்டி விற்றவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த ஓகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி வவுனியா, நெளுக்குளம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று காணாமல் போனதாக அதன் உரிமையாளரால் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வந்தது. வவுனியா, பாரதிபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து குறித்த பேருந்து வெட்டி இரும்புக்காக விற்பனை செய்யப்பட்து விசாரணைகளில் தெரியவந்ததையடுத்து,

பேருரூந்தை கடத்திச் சென்று இரும்புக்கு வெட்டி விற்பனை செய்தவர் என்ற சந்தேகத்தின் பேரில் புதன்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்றையதினம் குறித்த சந்தேகநபரை வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கமைய 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, லீசிங் பிரச்சினை காரணமாக குறித்த பேருந்து இரும்புக்கு வெட்டி விற்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது வாகன முறைப்பாட்டாளர் தலைமறைவாகியுள்ளதாகவும் வவுனியா பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சண் அபேயவர்த்தன அவர்களின் வழிகாட்டிலில் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி பிரியங்கர, பொலிஸ் உத்தியோகத்தர்களான ஜெயப்பிரகாஸ் (36508), திஸநாயக்கா (37348), புத்திக (74662), வீரசிங்க (10335), லங்காதிலக (67661) ஆகியோர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.