பிரான்ஸ் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு!!

544

fr

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இன்று இடம்பெற்ற தொடர் தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற தொடர் தாக்குதல்களில் குறைந்தது 153 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பிரெஞ்சு காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டம் வெளியிட்டுள்ளனர்.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கடும் கண்டம் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் பிரான்ஸ் மக்கள் அனைவரும் மன உறுதியுடன் இருக்க வேண்டும் என்று அந்நாட்டு ஜனாதிபதி பிரங்கொய்ஸ் ஹொலாந்தே தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவமானது யுத்தத்தை அறிவிக்கும் தாக்குதல் என அவர் குறிப்பிட்டார்.

தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 04 பேர் அந்நாட்டு பாதுகாப்பு படையினரின் பதில் தாக்குதலில் பலியானதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.