வவுனியாவில் இந்துக்கள் விளக்கேற்றி கொண்டாடிய கார்த்திகை தீபதிருநாள் (படங்கள்)

654

வவுனியாவில் இன்று  மாலை கார்த்திகை விளக்கீடு  மிகவும் சிறப்பாக வீடுகள் கோவில்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் கொண்டாடப்பட்டது .

வீடுகளுக்கு முன்னால்  வாழை குற்றியில் தீபமேற்றியும் சுட்டி விளக்குகளை கொளுத்தியும் இந்துக்கள் இன்றைய கார்த்திகை விளக்கீட்டினை கொண்டாடினர் .

கோவில்களில் இன்று சொக்கபானை எரிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது .

கார்த்திகை விளக்கீட்டின்  தத்துவம் 

படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர். சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.

11209442_10204885433049855_5658780907430507544_n 12249936_10204885433969878_1171861170267447581_n 12274300_1668875093329485_6982529361725479329_n 12274416_10204885434129882_7339936969692246599_n 12277333_1107394362613849_1030625740_n 12278742_1718509335048137_8541882638932566039_n 12285613_1107394335947185_1830684884_n 12285761_1107394242613861_1588058963_n 12285888_1107394102613875_1658215532_n 12301658_592869364184840_690057590822469231_n 12308906_1107394072613878_274523903_n