நடுவானில் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த பிரான்ஸின் முன்னாள் அமைச்சர்!!

262


1227123145Franceஆப்பிரிக்க நாடான கபோனின் தலைநகர் லிபர்வில்லில் நடந்த உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு பெரிஸ் நோக்கி சென்று கொண்டிருக்கும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, அதில் பயணித்த கர்ப்பிணி பெண்ணொருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் விமானத்தில் மருத்துவர்கள் யாராவது இருந்தால் பிரசவம் பார்க்க உதவுமாறு சிப்பந்திகள் அறிவிப்பு வெளியிட்டனர்.



இதனையடுத்து, அந்த விமானத்தில் இருந்த பிரான்ஸின் முன்னாள் அமைச்சர் பிலிப்பே தூஸ்த் பிளேசி அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளார். சுக பிரசவத்தில் அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. விமானம் அல்ஜீரியா வான்வெளியில் பறந்தபோது குழந்தை பிறந்தது.

2005ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை பிரான்ஸின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர் பிலிப்பே தூஸ்த் பிளேசி என்பது குறிப்பிடத்தக்கது.