மிக மோசமான நிலையில் அமிதாப் பச்சனின் கல்லீரல்!!

231

281548-amitabh-bachchan-3-700

இந்தியாவின் மிகப்பிரபலமான உச்ச நட்சத்திரம் நடிகர் அமிதாப்பச்சன். இவரது உடல் நிலை குறித்து அவரே ஒரு விழிப்புணர்வில் பேசியுள்ளார். கூலி என்ற திரைப்படத்தில் நடித்த போது மோசமான விபத்து ஒன்று நேர்ந்தது. சுமார் 200 பேரிடம் இருந்து ரத்தம் பெறப்பட்டு, 60 பாட்டில்களுக்கும் அதிகமாக எனது உடலில் ரத்தம் ஏற்றப்பட்டது. இதனால் நான் உயிர் பிழைத்தேன்.2004ல் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட போது ஹெபடைடிஸ்-பி வைரஸ் தாக்கியிருப்பது தெரியவந்துள்ளது.

எப்படி என மருத்துவர்கள் ஆராய்ந்தபோது, எனக்கு ஏற்கனவே ரத்தம் கொடுத்த இருநூறு பேரில் யாரோ ஒருவருக்கு ஹெபடைடிஸ்-பி வைரஸ் தாக்கியுள்ளது. அவரின் ரத்தம் எனக்கு ஏற்றப்பட்டதால் மெல்ல மெல்ல அந்த வைரஸ் எனது உடலிலும் வேலையை காட்டத்தொடங்கியுள்ளது. தற்போது 75% கல்லீரல் செயலிழந்து விட்டது.கடந்த பத்து வருடத்துக்கும் மேலாக எனக்கு உடலில் எந்த மாற்றமும் தெரியவில்லை என்பதால் எந்த பரிசோதனையும் செய்து கொள்ளவில்லை.

ஆனால், ‘ஆரம்பத்திலேயே மருத்துவ பரிசோதனை செய்திருந்தால் இவ்வளவு தூரம் கல்லீரல் பாதிக்கப்பட்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது’ என்றனர் டாக்டர்கள்.ஆனால் இது பற்றி பெரியளவில் பயப்பட வேண்டாம், ‘அயல் நாட்டில் உள்ள அத்தனை மருத்துவ வசதியும் தற்போது இந்தியாவிலேயே கிடைக்கிறது. இதனால் சிகிச்சை எடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழ முடியும்’ என டாக்டர்கள் நம்பிக்கை கொடுத்துள்ளனர் என்றார்.