அடுத்த 5 ஆண்டுகளில் கல்வித்துறையில் பாரிய மாற்றங்கள்!!

261

86606_akhila-viraj-kariyawasam

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் புதிய கல்விக் கொள்கைக்குப் பதிலாக புதிய கல்வி உரிமைச் சட்டம் ஒன்று கொண்டு வருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்வதாக கல்வியமைச்சர அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

இது தொடர்பாக எதிர்வரும் தினங்களில் பிரதமருடன் கலந்துரையாட இருப்பதாக அவர் தெரிவித்தார்.அத்துடன் எதிர்வரும் 5 ஆண்டுகளில் கல்வித்துறையில் பாரிய மடாற்றங்களை ஏற்படுத்தப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கல்வியமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே கல்வியமைச்சர அகில விராஜ் காரியவசம் இதனைத் தெரிவித்தார். வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்தமுறை கல்வித் துறைக்காக பாரிய தொகை நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தில் கல்வித்துறைக்கு 16 பில்லியன் ரூபா ஒதுக்கபட்டதாகவும், தற்போதைய அரசாங்கம் 83 பில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.