சுவிஸ் வீடுகள் மீது தாழ்வாக பறக்கும் விமானங்கள்: உறக்கத்தை தொலைத்து அவதிப்படும் பொதுமக்கள்!!

602

flight_low_004சுவிட்சர்லாந்து நாட்டில் வீடுகள் மீது தாழ்வாக விமானங்கள் பறக்கும்போது ஏற்படும் பலத்தை ஓசையாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உறக்கமின்றி தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிஸில் விமானங்கள் மூலம் வெளியாகும் பலத்த ஓசையினால் அவதியுறும் பொதுமக்கள் குறித்து கடந்த 2007ம் ஆண்டு முதல் புள்ளிவிபரங்கள் சேகரிக்கப்பட்டது.

இதில், சூரிச் நகர விமான நிலையத்திற்கு அருகே வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் அதிக அளவில் துன்பப்படுவதாக தெரியவந்துள்ளது. இது குறித்து சுவிஸ் பொருளாதார இயக்குனரான Carmen Walker Spah இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2014ம் ஆண்டு அதிக அளவிலான மக்கள் விமானத்தின் ஓசையினால் பெரிதும் அவதியுற்று வருகின்றனர். 2013ம் ஆண்டு விமான ஓசையினால் அவதிப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,000 என்றளவில் இருந்து கடந்தாண்டு 30 சதவிகிதம் அதிகரித்து 61,381 என்ற எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது.

மேலும், இரவு நேரங்களில் விமானங்கள் அடிக்கடி வீடுகள் மீது தாழ்வாக பறப்பதனால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 14 சதவிகிதத்திலிருந்து 16 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. எனினும், இந்த அதிகரிப்பிற்கு சூரிச் விமான நிலையத்திற்கு அருகே அதிக அளவிலான மக்கள் குடியேறியுள்ளதே காரணம் என தெரிய வந்துள்ளது.

மேலும், சூரிச் நகர் முழுவதும் மக்கள் தொகை அதிகரித்துள்ளதால், விமான பயனங்கள் அடிக்கடி மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால், விமான நிலையத்திலிருந்து விமானங்கள் புறப்படுவதும், தரையிறங்குவதும் அடிக்கடி நிகழ்கிறது.

இருப்பினும், விமானத்தில் இருந்து வெளியாகும் அதிகமான ஓசையை கட்டுப்படுத்தும் வகையில், சூரிச் விமான நிலையங்களுக்கு நவீன தொழில்நுட்ப வசதிகளுடைய விமான என்ஜின்கள் மற்றும் நீண்ட தூரம் பயணமாகும் விமானங்களை வாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என Carmen Walker Spah அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.