சைவ பிரியர்களுக்காக கோழி முட்டை போன்ற தாவர முட்டை தயாரிப்பு..!

480

சைவ பிரியர்களுக்கு வரப்பிரசாதமாக கோழி முட்டைக்கு பதிலாக தாவர முட்டை தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றது.
முட்டை சைவ உணவா? அல்லது அசைவ உணவா? என்ற சர்ச்சை இருந்து வருகிறது. எனவே, கோழி முட்டைக்கு பதிலாக தாவரத்தில் இருந்து சைவ முட்டை தயாரிக்கும் பணி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

முட்டையில் எண்ணை மற்றும் தண்ணீர் கலந்த பொருட்கள் உள்ளன. அதுபோன்ற பொருட்களை தாவரங்களில் இருந்து கண்டெடுத்து முட்டை தயாரிக்கும் முயற்சி நடைபெறுகிறது.

இப்பணியில் அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள “ஹாம்டன் கிரீக் புட்ஸ்” நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைவர் ஜோஷ் டெட்ரிக் கூறுகையில், ”சைவ பிரியர்கள் முட்டை மற்றும் இறைச்சிக்கு மாற்றான பொருட்களை எதிர்பார்க்கின்றனர்.

எனவே, அவர்களின் தேவையை நிறைவேற்ற நாங்கள் முயன்று வருகிறோம். தற்போது தூள் வடிவில் முட்டை தயாரித்துள்ளோம். அவை சில பேக்கரிகளில் முட்டைக்கு பதிலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதை கோழி முட்டை தரத்தில் அதேபோன்று வழங்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.