வவுனியா பூவரசு ஆரம்பப் பாடசாலை கட்டடத் தொகுதி திறப்பு விழா!!

465

 
1952ம் ஆண்டு பழமைவாய்ந்த வன்னி மன்னின் வவுனியா மன்னார் பிரதான வீதியிலே அமைந்துள்ள வவுனியா பூவரசு ஆரம்பப் பாடசாலையின் கட்டத்தொகுதி இன்று திறந்து வைக்கப்பட்டது.

1952ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை யுத்த காலப்பகுதியில் 1991ம் ஆண்டு செல் தாக்குதலுக்குள்ளாகி தற்காலிக கொட்டிலில் இயங்கிய பாடசாலை 1997ம் ஆண்டு இப்பாடசாலை மாணவர்கள் வவுனியா பூவரசங்குளம் பாடசாலைக்கு இடமாற்றப்பட்டிருந்தனர்.

அதன் பின்னர் குறிப்பாக கடந்த ஆட்சி காலத்தில் யுத்தம் முடிவடைந்த பின்னர் 2010ம் ஆண்டளவில் விசேட அதிரடி படையினரால் சுமார் 05 வருடகாலமாக தமது படைத்தேவைகளிற்காகா பயன்படுத்தப்பட்டது.

அதன் பின்னர் 2010 ஆண்டளவில் விசேட அதிரடிப்படையினர் இப்பாடசாலையை விட்டு விலகிய பின்னர் மீண்டும் வழமை போல் தமது கல்வி செயற்பாட்டை ஆரம்பித்து தற்போது இரண்டு மாடி கட்டிட தொகுதியினை இன்று(06.02.2016) காலை 10.00 மணியளவில் பாடசாலை அதிபர் ரவிச்சந்திரன் தலைமையில் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் இணைத்தலைவருமான கே.கே.மஸ்தான், வன்னி பாராளுமன் உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாண சபை உறுப்பினர்களான தியாகராஜா, இந்திரராசா, நடராஜா ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் போட்டிகளும் நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் இனைத்தலைவருமான கே.கே.மஸ்தான், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாண சபை உறுப்பினர்களான தியாகராஜா, இந்திரராசா, நடராஜா, வலயக்கல்வி பணிப்பாளர் அன்ரன் சோமராஜா, வவுனியா பூவரசங்குளம் பொறுப்பதிகாரி ராஜகுரு, விசேட அதிரடிப்படை அதிகாரி குமாரசிங்க, பாடசாலையின் முன்னாள் அதிபர் திருமதி இ.புனிதவதி, தமிழ் விருட்சத்தின் தலைவர் சந்திரகுமார், மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

IMG_6368 IMG_6369 IMG_6372 IMG_6376 IMG_6378 IMG_6379 IMG_6384 IMG_6387 IMG_6391 IMG_6395 IMG_6399 IMG_6405 IMG_6408 IMG_6412 IMG_6417 IMG_6419 IMG_6444 IMG_6445 IMG_6446 IMG_6449 IMG_6451 IMG_6455 IMG_6456 IMG_6458 IMG_6468 IMG_6472 IMG_6474 IMG_6479