3 மைல் தூரம் சிவப்பு கம்பள வரவேற்பு : சர்ச்சையில் சிக்கிய எகிப்திய ஜனாதிபதி!!(வீடியோ)

242


 
எகிப்திய ஜனாதிபதி கடந்து சென்ற 3 மைல் தூரம் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எகிப்திய ஜனாதிபதி அப்தேல் ஃபத்தா கெய்ரோவின் புறநகர் பகுதியில் நடைபெற்றுள்ள விழா ஒன்றில் கலந்துகொள்ள சென்றுள்ளார். இந்த விழாவானது அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளை திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்குவதேயாகும்.



விழாவினை ஏற்பாடு செய்திருந்த அமைப்பாளர்கள் ஜனாதிபதி புறப்படும் பகுதியில் இருந்து விழா மேடை வரை சிவப்பு கம்பளம் விரித்து அவரை வரவேற்றுள்ளனர். இச்சம்பவம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏழைகளுக்கு வீடு வழங்கும் விழாவில் கலந்துகொள்ளும் ஜனாதிபதியின் வாகனங்கள் 3 மைல் தூரம் சிவப்பு கம்பளத்தில் கடந்து வந்துள்ளது.



இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த நாட்டின் முக்கிய ராணுவ அதிகாரி, இது சிறப்பான அனுபவம் என்றும் எகிப்தியர்களால் எந்தவித விழாவினையும் திறம்பட நடத்த முடியும் என நிரூபித்துள்ளதாகவும் தெரிவித்தார்.



எகிப்தில் மொத்த ஜனத்தொகையில் 25 சதவீதத்தினர் வறுமை கோட்டின் கீழ் நிலையில் இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


1 2 3