தனியே பிரிந்ததில் இருந்து 2 ஆண்டுகளாக பட்டினியால் உயிரிழக்கும் சூடான் மக்கள்!!

253

Sudan

கடந்த 2013ம் ஆண்டு சூடானில் இருந்து பிரிந்து தெற்கு சூடான் என புதிய நாடு உருவானது. அன்றில் இருந்து அங்கு உள்நாட்டு போர் தொடங்கி இன்று வரை தொடர்ந்து நடைபெறுகிறது.

இதனால் அங்கு உற்பத்தி குறைந்து வேலை இன்மையும், அதை தொடர்ந்து உணவு பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு பகுதியில் உள்ள பார்எல்கஷல், வார்ப்ப ஆகிய மாகாணங்களில் கடும் உணவு பற்றாக்குறை உருவாகியுள்ளது.

இதே போன்று பல மாகாணங்களிலும் பரவலாக உணவு பற்றாக்குறை எழுந்துள்ளது. இதனால் சூடான் முழுவதும் 20 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இவர்களில் 40 ஆயிரம் பேர் பட்டினியால் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களின் உணவு இன்றி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதை ஐ.நா. உணவு மற்றும் விவசாய அமைப்பு, ஐ.நா. குழந்தைகள் நல நிதி (யூனிசெப்) மற்றும் உலக உணவு திட்டம் ஆகியவை இணைந்து தெரிவித்துள்ளன. இங்கு பட்டினி சாவை தடுக்க உள்நாட்டு போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.