வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் புதிய தலைமைக்குழு தெரிவு!!

567

VCC Re Meet

‘மனிதத்துவத்துக்கு எதிரான அரச வன்முறைகள், குற்றங்கள், படுகொலைகளினால்’ பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ‘நீதி மற்றும் இழப்பீடுகள்’ வழங்குமாறு இலங்கை அரசை வலியுறுத்தி, 2009ம் வருடத்துக்குப் பின்னரான காலங்களில் அதிதீவிரமாக போராடிக்கொண்டிருக்கும் இலாபநோக்கற்ற, ‘மக்கள் நலன்-தேசவளப்பாதுகாப்பு செயல்பாட்டு’ சிவில் சமுக மனித உரிமைகள் அமைப்பாகிய வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு,

தனது கடந்தகால செயல்பாடுகள் – நடவடிக்கைகளை குழு விமர்சனத்துக்கு உட்படுத்தி மதிப்பீடு செய்தலும், எதிர்கால வேலைத்திட்டங்கள் – நிர்வாக ஒழுங்கமைப்புகள் தொடர்பில் தீர்மானித்தலுமாகிய ‘மீள்தகவமைவுக் கலந்துரையாடலை’ கடந்த 26.03.2016 சனிக்கிழமை அன்று நிகழ்த்தி,

பிரஜைகள் குழுவின் எதிர்கால வேலைத்திட்டங்களை வசதிப்படுத்தி நெருக்கடிகளை நிவர்த்திக்கும் நோக்கத்தில், செயலாளர், உபசெயலாளர், தலைவர், உபதலைவர், பொருளாளர், ஊடகப்பேச்சாளர் உட்பட 11 உறுப்பினர்களைக்கொண்ட தலைமைக்குழுவையும், பிரதேச இணைப்பாளர்களையும் மீளத் தெரிவுசெய்து கட்டமைத்துள்ளதாக குழுவின் ஊடகப் பேச்சாளர் அ.ஈழம் சேகுவேரா அறிவித்துள்ளார்.

புதிய தலைமைக்குழுவின்

செயலாளராக திரு.தி.நவராஜ்
உபசெயலாளராக திரு.கு.இராஜேந்திரகுமார்
தலைவராக திரு.கோ.ராஜ்குமார்
உபதலைவராக திரு.நா.நடராசா ,
பொருளாளராக (கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் வவுனியா மாவட்ட சங்க முன்னாள் தலைவி) திருமதி.பே.பாலேஸ்வரி,
ஊடகப்பேச்சாளராக திரு.அ.ஈழம் சேகுவேரா,
குழுவின் இணைப்பாளராக திரு.எஸ்.றொஹான் ராஜ்குமார்,
நகரப்பகுதி இணைப்பாளராக திரு.த.கோணேஸ்வரன்,
கல்மடு மற்றும் பூம்புகார் பகுதிகளின் இணைப்பாளராக திரு.க.பழனிநாதன்,
நெடுங்கேணி பிரதேச இணைப்பாளராக (கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் வவுனியா மாவட்ட சங்கத்தலைவி) திருமதி.கா.ஜெயவனிதா அவர்களும்,

ஏலவே கடிதங்கள் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டு கலந்துரையாடலில் சமுகமளித்தவர்களின் ஒருமித்த சிபாரிசுவோடு (வாக்களிப்பு ஏதுமின்றி) தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும்,

புதிய தலைமைக்குழுவில் உறுப்புரிமை பெற்றுள்ள செயல்பாட்டாளர்கள் தமது பொறுப்புகள் – கடமைகளை 26.03.2016 இல் இருந்து நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினர் தமது உத்தியோகபூர்வ ஊடக அறிக்கை மூலமாக சகல பிரஜைகளுக்கும் அறியத்தந்துள்ளனர்.

Untitled-1 Untitled-2