இறப்புச் சான்றிதழ் தேவையில்லை மகன்தான் வேண்டும் : ஆணைக்குழு முன் கதறியழுத தாய்!!

310

 
எனது மகனை இரானுவத்தினர்தான் பிடித்துச் சென்றனர். எனது மகன் இறக்கவில்லை எனது மகனை மீட்டுத் தாருங்கள்.

காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நேற்று செவ்வாய்க்கிழமை தொடக்கம் வவுனியாவில் இடம்பெற்றுவருகின்றது.

இதில் சாட்சியமளிக்கையிலேயே தாய் ஒருவர் இக் கோரிக்கை விடுத்துள்ளார். அங்கு தொடர்ந்தும் சாட்சியமளித்த அவர்,

சிவசுப்பிரமணியம் இராசமலர் ஆகிய தான் 2 பிள்ளைகள், கணவருடன் நெடுங்கேனி பகுதியில் வசித்து வருகின்றேன்.

நெடுங்கேனியிலிருந்து செல் தாக்குதல் காரணமாக 2007ம் ஆண்டு அங்கும் இங்குமாக இடம் பெயர்ந்தோம். எனது மூத்த மகனை விடுதலைப் புலிகள் பிடித்துச் சென்றனர். அங்கிருந்து எனது முத்தமகன் சிவசுப்பிரமணியம் சிவதீபன் தப்பித்து வந்து எம்முடன் இணைந்து கொண்டார்.

விடுதலைப் புலிகளின் கண்களுக்கு தெரியமால் எனது மகனை அந்த யுத்தகாலத்திலும் பாதுகாத்து வந்தேன். யுத்தம் உக்கிரமானதன் காரணமாக இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்த சமயத்தில் இரானுவத்தினர் எனது மகனை மறித்து நாங்கள் விசாரணை செய்த பின்னர் உங்கள் மகனை விடுவதாகத் தெரிவித்தனர்.

நாங்கள் மகனை இராணுவத்தினரிடம் ஒப்படைத்ததும் இராமநாதன் முகாமிற்கு எம்மை அழைத்துச் சென்றனர். இதுவரை எனது மகனைக் காணவில்லை. எனக்கு மூன்று பிள்ளைகள். எனக்கு இவர் தான் மூத்தமகன்.

தற்போது கஸ்டத்தின் மத்தியில்தான் வாழ்ந்து வருகின்றோம். நான் பிச்சை எடுத்து சரி சந்தோசமாக வாழமுடியும். எனது பிள்ளை மட்டும் எனக்குப் போதும். உங்களது மகன் இறந்து விட்டார் என நீங்கள் நினைகின்றீர்களா என ஆணையாளர் வினவியபோது எனது மகனை உயிருடன் இராணுவத்தினரிடம் ஒப்படைத்தேன், எனது மகன் இறக்கவில்லை, எனக்கு எனது மகன்தான் வேண்டும் இறப்புச் சான்றிதல் இல்லை எனத் தெரிவித்தார்.

P1200081 P1200082 P1200083 P1200084