காணாமல் போனோர் ஆணைக்குழுவிற்கு வன்னியில் 1049 சாட்சியமளிப்பு : 306 பேர் புதிதாக விண்ணப்பம்!!

295


20160329_091922_1

வன்னி மாவட்டத்தில் 25ம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட காணாமல் போனோர் ஆணைக்குழுவிற்கு 1660 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போழுதும் 1049 நபர்களே சாட்சியமளித்தனர்.



இவ் ஆணைக்குழுக்கு புதிதாக 306 பேர் சாட்சியமளித்துள்ளதாக ஆணையாளர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார். வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று(30.03) இடம்பெற்ற ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நிறைவடைந்த பின்னர் கருத்துத் தெரிவித்த ஆணையாளர்..

25,26,27ம் திகதி முல்லைத்தீவில் நடைபெற்ற காணமல் போனோர் ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு 874 பேருக்கு அழைப்பு விடுத்திருந்த போதும் 457 பேர் மட்டுமே சாட்சியமளித்திருந்தனர். புதிதாக 110 பேர் தங்களது உறவுகளை காணவில்லை என சாட்சிமளித்தாகவும்,



28ம் திகதி மன்னாரில் நடைபெற்ற காணமல் போனோர் ஆணைக்குழுவிற்கு 257 பேருக்கு அழைப்பு விடுத்த போதும் 170 பேர் மட்டுமே சாட்சியமளித்திருந்தனர். புதிதாக 41 நபர்கள் சாட்சிமளித்திருந்தனர்.



29,30ம் திகதிகளில் வவுனியாவில் நடைபெற்ற ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு 529 பேருக்கு அழைப்பு விடுத்திருந்த போழுதும் 421பேர் மட்டுமே ஆணைக்குழுவிற்கு சாட்சிமளித்திருந்தினர். புதிதாக 155 நபர்கள் சாட்சிமளித்திருந்தனர்.