நியூஸிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இங்கிலாந்து அணி!!

344


ENG

உலகக் கிண்ண 20க்கு இருபது போட்டிகளில், நேற்று இடம்பெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதின.



இந்தியாவின் டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

எனவே, களமிறங்கிய நியூஸிலாந்து அணி, 20 ஓவர்கள் நிறைவில், 8 விக்கெட்டுக்களை இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றது.



இதன்படி 154 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன், அடுத்ததாக இங்கிலாந்து களமிறங்கியது.



அந்த அணி சார்பில் அதிரடியாக ஆடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜோசன் ரோய் 78 ஓட்டங்களைக் குவித்தார்.


அவரது அந்த சிறப்பான துடுப்பாட்டத்தின் உதவியுடன் அந்த அணி, 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து, 159 ஓட்டங்களை விளாசியது.

இதற்கமைய 7 விக்கெட்டுக்களால் இங்கிலாந்து அணி வெற்றி வாகை சூடியுள்ளது. எனவே உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு அந்த அணி தகுதி பெற்றுள்ளது.


இதேவேளை இன்று இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இதில் வெற்றி பெறும் அணி ஏப்ரல் 3ம் திகதி கல்கத்தாவில் இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.