கடும் வெயில் காரணமாக இன்று முதல் பாடசாலைகள் 12 மணியுடன் மூடல்!!

548

School

வடமத்திய மாகாண பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாணத்தின் தேசிய பாடசாலைகள் தவிர்ந்த அனைத்து பாடசாலைகளும் இன்று (02.05) முதல், மீள் அறிவித்தல் வழங்கப்படும் வரை நண்பகல் 12 மணி வரை மாத்திரம் கல்வி நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

நிலவும் அதிக வெப்பம் காரணமாக வட மத்திய மாகாணத்தின் தேசிய பாடசாலைகள் தவிர்ந்த அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகளை 12 மணியுடன் நிறைவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வட மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் டபிள்யூ.டி.ஏ. மானெல் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

தற்போது நிலவும் அதிக வெப்பம் காரணமக மாணவர்களுக்கு நோய்த்தாக்கம் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பாடசாலை நேரத்தில் அதிக வெப்பம் காரணமாக வகுப்பறைகளிலும், வெளியிலும் நடமாட முடியாமையாலும், பாடசாலைகளை மூடுமாறு பொலன்னறுவை மாவட்ட இடர்முகாமைத்துவத்தும் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினால் மாகாண கல்வியமைச்சிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அதன் பிரகாராம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வட மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் டபிள்யூ.டி.ஏ. மானெல் சுட்டிக்காட்டினார்.