மாட்டு இறைச்சியைப் போன்ற நிறத்துடனும் சுவையுடனும் வந்துவிட்டது சைவ இறைச்சி!!

1228


Veg

சான் பிரான்சிஸ்கோவில் தாவரங்களில் இருந்து இறைச்சி போன்ற சுவையுடைய பர்கரைத் தயாரித்திருக்கிறார்கள்.



உலகம் முழுவதும் இறைச்சி அதிக அளவில் மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது. நீண்ட காலமாகவே இறைச்சிக்கு மாற்றாக அதே சுவையுடைய உணவுப் பொருளை உருவாக்க வேண்டும் என்று நிபுணர்கள் முயற்சி செய்து வந்தனர்.

ஆனால், சான் பிரான்ஸ்சிகோவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று அந்த முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டது.



கடந்த 5 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து, மாட்டு இறைச்சியைப் போன்ற நிறமும் சுவையும் உடைய பொருளை உருவாக்கிவிட்டனர்.



ஒரு உணவுப் பொருள் புதிதாகக் கண்டுபிடிக்கப்படும்போது அது உலகத்தையே மாற்றிவிடவேண்டும். அப்படி ஒரு பொருளைத்தான் நாங்கள் தற்போது உருவாக்கியிருக்கிறோம்.


இந்தத் தாவர இறைச்சியை சமைக்கும்போது மாட்டு இறைச்சி சமைப்பது போலவே மணம் வரும். பார்க்கவும் கண்களைக் கவரும். சுவையும் அசல் மாட்டு இறைச்சியை ஒத்திருக்கும். பர்கரில் வைத்துச் சுவைத்தவர்கள் தாவர இறைச்சி என்பதை நம்பவில்லை. அத்தனைத் துல்லியம்.

நாங்கள் சைவ உணவு உண்பவர்களுக்காக மட்டும் இந்தத் தாவர இறைச்சியை உருவாக்கவில்லை. பல கோடி அசைவப் பிரியர்களுக்காகவே இதை உருவாக்கியிருக்கிறோம். தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு, கோதுமை, உருளைக்கிழங்கில் உள்ள புரோட்டீன்கள் எல்லாம் சேர்ந்து தாவர இறைச்சியைக் கொடுக்கின்றன.


இறைச்சியை விட இதில் அதிக அளவில் புரோட்டீனும் குறைந்த அளவு கொழுப்பும் இருக்கின்றன. அதனால் பயமின்றி இந்தத் தாவர இறைச்சியைச் சாப்பிடலாம். தற்போது இதன் விலை அதிகமாக இருக்கிறது.

ஆனால் அதிக அளவில் உற்பத்தி செய்யும்போது விலை குறைந்துவிடும். அடுத்த 50 ஆண்டுகளில் சைவ இறைச்சி முக்கிய இடத்தைப் பிடித்துவிடும் என தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.