மூளையின் செயல்திறனை மட்டுப்படுத்தி, அறிவாற்றலை இழக்கச் செய்யும் நோய்..!

614


brainமூளையின் செயல்திறனை மட்டுப்படுத்தி, அறிவாற்றலை இழக்கச் செய்யும் ஆல்சைமர் நோயினால் 2006-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, உலகளாவிய அளவில் சுமார் 3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது.

2050ம் ஆண்டிற்குள் சுமார் 12 கோடி பேர் இந்த நோயினால் பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிய வந்துள்ளது.



ஆரம்பத்தில் சிறிய நினைவாற்றல் இழப்பு என்ற நிலையில் தொடங்கும் ஆல்சைமர் நோய், நாளடைவில் மனக்குழப்பம், மனச்சிதைவு, நீண்டகால நினைவாற்றல் இழப்பாக உருமாறி இறுதிகட்டத்தில் புலன் உணர்வுகளை குறைத்து இறப்பை ஏற்படுத்திவிடும்.

இந்நோய்க்கு முழு நிவாரணம் அளிக்கக்கூடிய மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இந்நோய் தொடர்பான நிறைய ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



அமெரிக்காவை சேர்ந்த ஆய்வாளர்கள் இந்நோய் தொடர்பாக நடத்திய ஆய்வில், குடிநீர் மற்றும் உணவு வகைகளில் அதிக அளவில் காணப்படும் தாமிரம் (செம்பு) மூளை மண்டலத்தில் காரைப் படலத்தை ஏற்படுத்தி ஆல்சைமர் நோயை தீவிரப்படுத்துகிறது என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.



ஈரல், சாக்லேட், பருப்பு, எள், சிப்பி மற்றும் கனவா மீனில் தாமிர சத்து அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


நரம்பு மண்டல செயல்பாடு, எலும்பு வளர்ச்சி, இயங்கு தசைகள் மற்றும் ஹார்மோன் சுரப்பி ஆகியவற்றில் தாமிரத்தின் பங்கு முக்கியமானதாக இருந்தாலும், நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவு மற்றும் குடிநீர் நமது அறிவாற்றலுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என நியூயார்க்கில் உள்ள ரோசெஸ்டர் பல்கலைக்கழக பேராசிரியர் ரஷீத் டியென் குறிப்பிட்டுள்ளார்.