சோதனைகளைக் கடந்து நீண்ட முடியுடன் சாதனை படைக்கும் பெண்!!(படங்கள்)

504

உலகில் எத்தனையோ சாதனையாளர்கள் குறித்து செய்திகள் வந்திருக்கக்கூடும். அனால் நீளத் தலைமுடி குறித்த சாதனையாளர் இந்தப் பெண் ஒருவராகத்தான் இருக்கமுடியும். இவரது சாதனையை முறியடிக்க வேறு எவரேனும் வருவார்களா என்பது சந்தேகத்திற்குரிய விஷயம் ஆகும்.

ஜோர்ஜியா நாட்டின் அட்லாண்டா நகரில் தனது மகனுடனும், இரண்டாவது கணவருடனும் வசித்து வருபவர் ஆஷா மண்டேலா ஆவார். 50 வயதாகும் இவர் கடந்த 25 வருடங்களாகத் தனது முடியைக் கத்தரித்துவிடாமல் கவனமுடன் பாதுகாத்து வருகின்றார்.

கடந்த 2008ம் ஆண்டில் நீளமான கூந்தலுக்கான முதல் பெண்ணாக இவர் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றார். அடுத்த வருடம் இவரது ஒரு முடிக்கற்றையின் நீளம் 19 அடி 6 அங்குலமாக இருந்தது.

இதனால் இவரே இவரது சாதனையை முறியடித்தவராக அறியப்பட்டார். அதற்கு அடுத்த வருடம் இதுபோல் பின்னப்பட்டிருக்கும் முடிக்கற்றைகள் மிக நீளமாக வளரும் தன்மை கொண்டிருப்பதால் கின்னஸ் புத்தகமே அந்த சாதனையைக் குறிப்பிடுவதை நிறுத்திவிட்டது.

சிறுசிறு பின்னல்களாக தனது முடியினை அலங்கரித்துக் கொள்ளும் ஆஷா வெளியில் செல்லும்போது குழந்தைகளை சுமந்து செல்லுவது போன்ற குறுக்குத் துணியினைத் தோளில் கட்டிக்கொண்டு அதில் தனது முடியை சுருளாக்கி வைத்துக் கொள்கின்றார்.

சென்ற வாரம் அளந்தபோது இவரது முடிக்கற்றையின் நீளம் 55 அடி 7 அங்குலமாக இருந்துள்ளது. 39 பவுண்ட் எடை கொண்ட இவரது முடி இவருக்கு ஏராளமான இரசிகைகளைப் பெற்றுத்தந்துள்ளது. இவரது முடி ஒன்பதாவது உலக அதிசயம் என்றும் இவரை நடமாடும் சரித்திரம் என்றும் இவரது இரசிகைகள் அழைக்கின்றனர்.

இரண்டு முறை மாரடைப்பு வந்தபோதும் புற்று நோயினால் தாக்கப்பட்டு மருத்துவம் செய்துகொண்ட போதும் இவரது முடி கொட்டவில்லை.
மருத்துவர்கள் இத்தனை நீளமான முடி சுகாதரத்திற்குக் கெடுதல் என்று கூறியுள்ள போதிலும் இதனைக் கத்தரிப்பதில் ஆஷாவிற்கு விருப்பமில்லை.

m1

m2

7 6  4 3  2

5

1