ஆண்களே இது உங்களுக்கான அழகு குறிப்புகள்!!

1227


Boy Beauty

பெண்களை விட ஆண்கள் அழகின் மீது அதிகமாக கவனம் செலுத்துவதில்லை.. அது ஏன் என்றும் புரியவில்லை. ஆனால் பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகமாக வெளியுலக தொடர்பு இருக்கிறது. அவர்கள் தான் வெயில், மழை,தூசியிலும் செல்வார்கள்.



ஆனால் அவர்கள் அழகின் மீது அக்கறை காட்டமாட்டார்கள். ஆண்கள் ஆடைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் முகத்துக்கு கொடுப்பதில்லை எனபது தான் வருத்தம் ஆண்களும் அழகிற்கு என்று நேரம் ஓதுக்கி உடலை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

வீட்டில் எதுவும் செய்ய முடியவில்லை என்றால் மாதம் ஒரு முறை ப்யூட்டி பார்லர் போகலாம்.



வீட்டிலே செய்யும் சில அழகு குறிப்புகள் இதோ. வாரம் ஒரு முறையாவது செய்யுங்கள்.



முக அழகுக்கு:


பொதுவாக ஆண்கள் வேலைநிமித்தமாக அதிகமாக வெயிலில் சுற்றிதிரிவார்கள்.
வீட்டுக்கு வந்தவுடன் முகத்தை நன்றாக குளிர்ந்த நீரில் கழுவவும். இன்னும் கொஞ்சம் நேரமிருந்தால் ஐஸ் கட்டியினை ஒரு துணியில் போட்டு முகத்தில் ஓத்தடம் கொடுக்கவும். இதனால் முகம் தெளிவடையும். இதனை தினமும் செய்யுங்கள்.

சில ஆண்களுக்கு முகம் உலர்ந்து சொரசொரப்பாக இருக்கும் அவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து அதில் பாலாடையும், பன்னீரையும் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊறவிடவும்.


பிறகு இளஞ்சூடான வெந்நீரில் கழுவினால் சில நாட்களில் தோல் மிருதுவாக மாறி பளபளப்பாக மாறிவிடும்.

தினமும் பசும் பாலில் ஏடு எடுத்து முகம் முழுவது நன்கு அழுத்தித் தேய்து ஊற வைக்கவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

முகத்தின் கரும்புள்ளிகள் மாற சிறிது எலுமிச்சை சாறுடன் தயிரை சமமாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். கருபுள்ளிகள் மாயமாக மறைந்துவிடும்.

உதடுகளுக்கு


சில ஆண்கள் சிகெரட் பிடிப்பதால் உதடுகள் கருமையாக இருக்கும் அதனை போக்க பீட்ரூட் சாறு, அல்லது புதினா இலை சாறு, அல்லது மாதுளை சாறு எடுத்து உதடுகளில் பூசி வர உதடுகள் சிகப்பாக மாறிவிடும். (தொடர்ந்து சிகெரட் குடிப்பவர்களுக்கு இந்த டிப்ஸ் பயனில்லை)

பற்களுக்கு

எலுமிச்சை சாறு + உப்பு கலந்து அல்லது புதினா இலையை காய வைத்து அதனை தூளாக்கி இந்த தூளில் பல் தேய்த்தால் பற்கள் பளிச்சென்று இருக்கும்.

தலைமுடிக்கு

தலைமுடி நன்றாக கருகருவென்று வளர்வதற்கு நல்லெண்ணெய், விளக்கெண்னெய், தேங்காய் எண்ணெய் மூன்றும் சமமாக எடுத்து தலைக்கு தேய்த்து ஊரிய பின்பு குளிக்க வேண்டும்

வீட்டில் பெண்களிடம் சொல்லி மருதாணி இலை, கறிவேப்பிலை
சிறிது செம்பருத்தி பூ, இதனை காய வைத்து நன்றாக அறைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு தலைக்கு தேய்க்கலாம்.

உணவில் அதிகமாக கீரை, மற்றும் பச்சை காற்கறிகளை அதிகம் சேர்க்கவும்

இளம் நரை வந்தவர்கள் ஷாம்பு போடுவதை தவிற்க்கவும். தலைமுடியை ட்ரையாக வைக்க வேண்டாம். சுத்தமான தேங்காய் எண்ணெய் தடவவும்.

முட்டையில் வெள்ளை கருவை தலைக்கு தேய்த்து குளிக்கலாம்

ஹேர் ட்ரை, ஸ்பிரே, ஜெல், ஹேர் கலரிங், ஸ்பார்கல் போன்றவையினை தலைமுடிக்கு அதிகமாக பயன்படுத்த வேண்டாம்.