அதிக உடல் எடை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் : ஆய்வில் தகவல்!!

677


Prostate-Cancer

அதிக உடல் எடை உடையவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக அமெரிக்காவின் வொஷிங்டன் பல்கலையின் ஆய்வில் தெரியவந்துள்ளது.



புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் அதிக உடல் பருமன் உள்ளவர்களாக இருப்பதாக அந்த பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

நொறுக்குத் தீனி பழக்கம், அடிக்கடி கொழுப்பு அதிகமான உணவு உட்கொள்ளுதல் போன்ற காரணங்களால் உலகில் பெரும்பாலானவர்கள் தங்கள் உடல் எடையை அதிகாமாக்கி கொள்கின்றனர்.



உணவுப்பழக்கம் ஒரு புறம் இருக்க முறையான உடல் பயிற்சி இல்லாமல் இருப்பதும் நம்மில் பலருக்கு அதிக உடல் பருமன் ஏற்பட முக்கிய காரணமாகிறது.



அதிக உடல் எடை உள்ளவர்களுக்கு வயிறு, மூளை, கல்லீரல் மற்றும் கணையம் போன்ற பகுதிகளில் புற்றுநோய் ஏற்பட அதிகம் வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


உடலில் உள்ள அதிக கொழுப்பு. ஈஸ்ட்ரோஜன் , டெஸ்டோஸ்டெரோல் போன்ற ஹோர்மோன்களை அதிகம் சுரக்க செய்வதுடன் புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து விடுவதாக விஞ்ஞானிகள் குறிப்புட்டுள்ளனர்.