வயிற்றில் வைர காதணியுடன் உலாவரும் கோழி!!

558


hen_diamond_ring

இங்கிலாந்தில் வயிற்றுக்குள் வைர காதணியுடன் கோழி ஒன்று உலாவந்து கொண்டிருக்கிறது.



இங்கிலாந்தின் பெர்க்ஷயர் பகுதியில் வசிப்பவர் கிளாரி லெனான் 38 வயதான இவர் சாரா என்ற கோழியை செல்லமாக வளர்த்து வருகிறார்.
சாராவை எப்போதும் தன்னுடனேயே வைத்து சுற்றித் திரிந்து கொண்டிருப்பார்.

அப்போது சாரா கிளாரியின் காதில் இருந்த காதணியை விழுங்கி விட்டது. வைர காதணி காதலனின் அன்பு பரிசு என்பதால் கோழியை மருத்துவரிடம் எடுத்து சென்றார்.



அப்போது எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது கோழியின் வயிற்றில் காதணி சிக்கி இருப்பது உறுதியானது. ஆனால், சிக்கலான பகுதியில் காதணி இருந்ததால் அதை அறுவைசிகிச்சை மூலம் வெளியில் எடுக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.



அப்படியே செய்தாலும் கோழியின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை உள்ளே காதணி இருந்தால் அதன் உயிருக்கு எந்த பாதிப்பும் வராது என்றும் தெரிவித்து விட்டனர். இதுகுறித்து கிளாரி கூறுகையில் வைர காதணி எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் என் சாரா.


அதை கொன்று காதணியை எடுக்க எனக்கு மனமில்லை. சாரா அதிக பட்சமாக இன்னும் 8 ஆண்டு உயிர் வாழும், அதுவரை காத்திருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

hen