உலகின் மிக நீளமான பீட்சா : கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது!!

508

அமெரிக்காவில் உலகிலேயே மிக நீளமான பீட்சா தயாரிக்கப்பட்டு தற்போது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள Fontana நகரில் கடந்த சனிக்கிழமை அன்று இச்சாதனை நிகழ்த்தப்பட்டது.

2,540 கிலோ எடையுள்ள சாஸ் மற்றும் 1,540 கிலோ எடையுள்ள சீஸ் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி பீட்சா மிதமான சூட்டில் தயாரிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் சுமார் 2.1 கி.மீ நீளம் வரை தயாரிப்பது என முடிவெடுக்கப்பட்டது. ஆனால் முந்தைய கின்னஸ் சாதனை பீட்சாவின் நீளம் 1.8 கி.மீ என்பதால் இதனை 1.93 கி.மீ நீளம் வரை தயாரித்துள்ளனர். இதன் ஒட்டுமொத்த எடை 7,711 கிலோ ஆகும்.

உலகின் மிக நீளமான பீட்சா என்ற பட்டியலில் இது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

மேலும், பீட்சா தயாரிப்பு பணி முடிவடைந்ததும் இதனை ஏழைகளுக்கும் வீடு இல்லாதவர்களுக்கும் இலவசமாக பிரித்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.