வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தானத்தின் பிரம்மோற்சவ பெருவிழா நாளை (26.09.2017) செவ்வாய்கிழமை பகல் 11.00மணிக்குசிவஸ்ரீ முத்துஇரத்தின வைத்திய நாத குருக்கள் தலைமையில் கொடிஏற்றத்துடன் ஆரம்பமாகிறது.
மேலும் சப்பர திருவிழா -03.10.2017 செவ்வாய்கிழமை இரவு 8.00 மணிக்கும்
தேர் திருவிழா -04.10.2017 புதன்கிழமை காலை 10.30 மணிக்கும்
தீர்தோற்சவம் – 05.10.2017 வியாழக்கிழமை 11.00 மணிக்கும்
திருக்கல்யாணம் – 06.10.2017 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கும்
ஆஞ்சநேயர் உற்சவம் 07.10.2017 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கும் இடம்பெற இருக்கிறது.
பக்த அடியார்கள் வருகை தந்து அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணுவின் அருளை பெற்று கொள்ளும் வண்ணம் வேண்டப்படுகின்றனர்.