முகச்சுருக்கத்தை தடுக்கும் வெங்காயம்!!

600

faceமுகத்தில் சுருக்கங்கள் தோன்றுகின்றனவா, முகம் சோர்வாக தோன்றுகின்றதா கவலைய விடுங்கள். எம்மிடம் இருக்கும் பொருளை வைத்தே குணப்படுத்திவிடலாம்.

வெங்காயம் சிறந்த கிருமி நாசினியாகும் முகத்தில் காணப்படும் வடுக்ககளையும், மேடு பள்ளங்களையும் நீக்குவதற்கு வெங்காயத்தை சாறு எடுத்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து முகம் கழுக வேண்டும்.

அவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் தழும்புகள் படிப்படியாக மறைவதை காணலாம்.

வெங்காயத்தை நன்கு மசித்து அதனுடன் தேன் விட்டு கலந்து முகத்தில் பூசி வந்தால் முகச்சுருக்கம் குறைந்து விடும். கண்கள் சோர்வாக இருந்தால் குளிர்ந்த நீரில் ஒரு கரண்டி உப்பு சேர்த்து கண்களை விழித்து முகம் கழுவினால் சோர்வு போய் புத்துணர்ச்சி
கிடைக்கும்.