கொலைகார ரோபோக்கள் பற்றி தெரியுமா?

377

மனிதனின் கட்டளையைக் கொண்டு செயல்படும் ரோபோக்கள் LAWS ஆகும். ராணுவ பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட இவை கொலைகார ரோபோக்கள் என்று அழைக்கப்படுகின்றன.

Lethal Autonomous Weapons என்பதன் சுருக்கமே LAWS ஆகும், இந்த ரோபோக்கள் ராணுவத்திற்காக உருவாக்கப்பட்டவை. இதனை இயக்கி, எதிரிகளின் கருவிகளையும், மனிதர்களையும் எளிதில் அழித்து விடமுடியும்.

இவற்றை நீர், நிலம், ஆகாயம் என அனைத்து இடங்களிலும் செலுத்த முடியும் என்பதால், இவை ரோபோ ஆயுதங்கள் மற்றும் கொலைகார ரோபோக்கள் என்று அழைக்கப்படுகின்றன.

மனிதன் கட்டளை இட்டால், எவ்வளவு பெரிய கூட்டத்திலும் குறிப்பிட்ட மனிதரையோ, இலக்கையோ மிகத் துல்லியமாக அடையாளம் கண்டு அழித்துவிடும் சக்தி வாந்தவை.

ஒரு நகரத்தினைக் கூட இவை அழித்துவிடும் திறன் வாய்ந்த இந்த ரோபோக்கள் மனிதனைப் போல நூறு மடங்கு விரைவாக செயல்படும் என கூறப்படுகிறது.

தற்போது மனிதனின் கட்டளைக்கு ஏற்ப செயல்பட்டாலும் எதிர்காலத்தில் தானாகவே செயல்பட ஆரம்பித்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

மேலும், ஸ்டீபன் ஹாகிங், நோம் சோம்ஸ்கி போன்ற பல அறிஞர்களும் இந்த ரோபோக்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் உலகில் உள்ள ஆயுதங்களைக் குறைத்தல் மற்றும் அழித்தல் அமைப்பின் தூதுவர் அமன்தீப் கில் கூறுகையில், ரோபோக்களால் உலகைக் கைப்பற்றிக் கொள்ள முடியாது. இன்றும் மனிதனே மகத்தானவன். எனவே, அளவுக்கு அதிகமாக பயப்பட தேவையில்லை’ என தெரிவித்துள்ளார்.