வவுனியா நீதிமன்றில் சான்றுப் பொருட்கள் ஏலவிற்பனை!!

271

வவுனியா நீதவான் நீதிமன்றில் எதிர்வரும் சனிக்கிழமை (09.12.2017) காலை 10 மணிமுதல் சான்றுப் பொருட்கள் ஏலவிற்பனைக்கு விடப்படவுள்ளதாக வவுனியா நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது

பறிமுதல் செய்யப்பட்டதும், உரிமை கோரப்படாததுமான கீழ்க்காணும் பொருட்கள் எதிர்வரும் சனிக்கிழமை 9ஆம் திகதி காலை 10 மணிக்கு வவுனியா நீதிமன்ற கட்டடத் தொகுதியில் பகிரங்க ஏலவிற்பனை செய்யப்படவுள்ளது.

குறிப்பிட்ட ஏதாவது ஒரு பொருட்கள் சம்பந்தமாக உரிமை கோருபவர்கள் இருப்பின் ஏலவிற்பனைக்கு குறிப்பிட்ட தினத்தில் ஏலவிற்பனை ஆரம்பமாவதற்கு முன்னர் உரிமைக் கோரிக்கையினை சமர்ப்பித்தல் வேண்டும்.

புதிவாளர் அனுமதி பெற்று ஏலவிற்பனை ஆரம்பமாவதற்கு முன்னர் ஏலவிற்பனைக்கென குறிப்பிடப்பட்ட பொருட்களைப்பார்வையிடலாம்.

நீதிமன்றத்தினால் தீர்மானிக்கப்படும் தகுந்த தொகையானது விற்பனையின்போது ஏற்றுக்கொள்ளப்படாத சந்தர்ப்பத்தில் மன்றில் விருப்புரிமையின் பிரகாரம் அப்பொருட்களை ஏலவிற்பனையில் இருந்து நீக்கிவிடுவதற்கான உரித்தை மன்று கொண்டுள்ளது.

ஏலவிற்பனையின்போது ஏலத்தில் வாங்கப்பட்ட பொருட்கள் உடனடியாகப் பணம் செலுத்தப்பட்டு நீதிமன்ற வளாகத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். எல்லாக் கொடுப்பனவுகளும் பணமாக செலுத்தப்படவேண்டும். காசோலைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

பொருட்களை ஏலத்தில் கோருபவர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தேசிய அடையாள அட்டையினை கொண்டுவருதல் அவசியமானதாகும்.

ஏலவிற்பனை செய்யப்படவுள்ள பொருட்கள், 11மோட்டார் சைக்கில்கள், இரண்டு முச்சக்கரவண்டிகள், சவல்கள், மண்வெட்டிகள், இரண்டு உழவு இயந்திரங்கள், இரண்டு உழவு இயந்திரப்பெட்டிகள், காட்டுக்கத்திகள், கோடாரிகள், இரும்புவாளிகள், பெரிய தாச்சிகள் சில பொருட்கள் சேதமைந்த நிலையிலும் காணப்படுகின்றன.

மேற்குறிப்பிடப்பட்ட சான்றுப் பொருட்கள் சனிக்கிழமை காலை ஏலவிற்பனை செய்யப்படவுள்ளதாக வவுனியா நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.