டெஸ்ட் போட்டி முறைகளில் அதிரடி மாற்றம்!!

442

நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் தினமும் 98 ஓவர்கள் வீச வேண்டும் என்று, பொலோ- ஒன் கொடுப்பதற்கான ஓட்ட வித்தியாசம் 150 ஓட்டங்கள் எனவும் ஐ.சி.சி. கூறியுள்ளது.

கிரிக்கெட்டில் தற்போது டெஸ்ட், 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் மற்றும் 20 ஓவர்கள் கொண்ட டி20 என மூன்று வகை போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ஒரு வீரரின் உண்மையான திறமையை கண்டறிய டெஸ்ட் போட்டிதான் சிறந்ததாக இருந்து வருகிறது.

காலப்போக்கில் ஐந்து நாட்கள் முழுவதும் செலவழித்து டெஸ்ட் போட்டியை காண ரசிகர்கள் விரும்புவதில்லை. இதனால் ஒருநாள் போட்டிக்கு முக்கியத்தும் கொடுத்த ரசிகர்கள், தற்போது டி20 கிரிக்கெட்டிற்கு மாறி வருகின்றனர். இதனால் பாரம்பரிய போட்டியாக கருதப்படும் டெஸ்டிற்கு ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் காலையில் நடைபெற்று வந்த டெஸ்ட் போட்டிகளை பகல் – இரவு டெஸ்ட் போட்டியாக நடத்த அனைத்து நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன. அவுஸ்திரேலியா இதில் முன்னணியாக விளங்குகிறது. அந்த அணி அடிலெய்டில் பகல் – இரவு டெஸ்ட் போட்டிகளை நடத்தி வருகிறது.

இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளை நான்கு நாட்களாக குறைக்க வேண்டும் என்ற கருத்துக்கள் நிலவி வருகிறது. முதற்கட்டமாக தென்னாபிரிக்கா இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளது. இதற்கு ஐ.சி.சி. சம்மதம் தெரிவித்துள்ளது.

தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை தென்னாபிரிக்க – சிம்பாப்வே இடையில் வருகிற 26ம் திகதி ‘பாக்சிங் டே’ டெஸ்டாக இதை நடத்துகிறது. இந்த டெஸ்ட் எத்தனை மணி நேரம் நடக்கும்? எத்தனை ஓவர்கள் வீச வேண்டும் என்ற விதிமுறை வகுக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு நாள் 98 ஓவர்கள் வீச வேண்டும் என்றும், பொலோ-ஆன் 150 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும், 6.30 மணி நேரம் போட்டி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.