94 கிலோவில் இருந்து 54 கிலோவாக குறைந்தது எப்படி?

491


மும்பையை சேர்ந்த 26 வயது இளம்பெண் 94 கிலோ எடையால் அவதிப்பட்டதால் 11 மாதத்தில் 40 கிலோ எடை குறைத்து தற்போது 54 கிலோவாக உள்ளார்.



Ghosh(26) என்ற இளம்பெண் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்துக்கொண்டே எம்பிஏ பயின்று வந்துள்ளார். இதனால் மன அழுத்தம் மற்றும் முறையற்ற உணவுகளால் எனது உடல் எடை அதிகரித்தது.

மேலும் உடல் எடையால் அவதிக்குள்ளான நான், எப்படியாவது குறைக்க வேண்டும் என்ற முழுகவனத்துடன் ஈடுபட்டேன். ஒரு நல்ல உடற்பயிற்சி மையத்துக்கு சென்று சேர்ந்தேன், அன்றாடம் உடற்பயிற்சி மையத்துக்கு சென்று சுமார் 3 மணி நேரம் உடற்பயிற்சிகளை மேற்கொள்வேன்.



அடுத்ததாக உணவு விடயத்தில் மிகவும் கட்டுக்கோப்பாக நடந்துகொண்டேன், காலை உணவாக ஓட்ஸ் மற்றும் பழங்கள் சாப்பிடுவேன். இடைப்பட்ட நேரத்தில் ஆப்பிள், ஆரஞ்சு அல்லது முட்டையின் வெள்ளை கருவை சாப்பிடுவேன்.



எனது மதிய உணவு கண்டிப்பாக பருப்பு, வேகவைத்த காய்கறிகள், அல்லது சாலட் சாப்பிடுவேன். இரவு நேரம் கண்டிப்பாக புரோட்டீன் உணவுகளைத்தான் சாப்பிடுவேன், இரவு தூங்கப்போவதற்கு முன்னர் ஒரு டம்ளர் பால் குடிப்பேன்.


கடந்த 11 மாதங்களாக இந்த உணவுபட்டியலையே பின்பற்றி வந்தேன், தற்போது 54 கிலோ எடையில் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.